“உங்க வீட்டு மூலிகை தோட்டம் இருக்கா?” – அப்ப எங்க மூலிகைகள வையுங்க..!!

காலங்கள் மாறலாம், ஆனாலும் மூலிகைகளின் பயன் என்றுமே மாறாது. அன்று முதல் இன்று வரை மூலிகைகளின் மூலம் நமது ஆரோக்கியம் பெருமளவு பேணப்பட்டு வந்துள்ளது. இந்த மூலிகைகளின் மதிப்பு தெரியாமல் நமது பாரம்பரிய பழக்கங்களை மறந்ததின் காரணமாக ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகி எண்ணற்ற பணத்தை விரயம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

 அந்த நிலையில் இருந்து மீண்டு வர உங்கள் வீட்டில் இருக்கும் மூலிகை தோட்டத்தில் இந்த செடிகளை வளர்த்தாலே போதும். நீங்கள் மருத்துவரிடம் செல்லாமலேயே உங்கள் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க முடியும்.

அதுவும் உணவே மருந்து என்ற அடிப்படை கோட்பாட்டை கொண்டு நீங்கள் மூலிகை அறிவை பெருக்கிக் கொண்டால் கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும். இனி மாத்திரைகள் வேண்டாம் மூலிகை செடிகள் போதும் என்று கூறும் அளவுக்கு நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

அந்த வகையில் சின்ன சின்ன நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடிய மூலிகைகளை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்க்கலாம்.

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்க வேண்டிய மூலிகை

காலநிலை மாறுபாடு காரணமாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அடிக்கடி ஏற்படுகின்ற கப நோய்களை விரட்டி அடிக்க கூடிய மூலிகையான கற்பூரவள்ளி, தூதுவளை, நொச்சி, திருநீற்றுப் பச்சிலை, கண்டங்கத்திரி, தும்பை, துளசி போன்றவற்றை உங்கள் வீட்டு மூலிகை தோட்டத்தில் வளர்ப்பதின் மூலம் நீங்கள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதல்களில் இருந்து இதனை பயன்படுத்தி விடுதலை அடைய முடியும்.

தோல்களில் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த குப்பைமேனி, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை உங்கள் தோட்டத்தில் வளர்க்கலாம். அது மட்டும் அல்லாமல் பிரண்டை, மணத்தக்காளி போன்ற செடிகளை நீங்கள் வளர்க்கும் போது செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும் மூக்கிரட்டை, முடக்கத்தான் கீரை போன்றவற்றை நீங்கள் பயிர் செய்து சாப்பிடுவதின் மூலம் வாத நோய்கள் குணமாகும் முழங்கால் வலி ஏற்படாது.

இருக்கின்ற சிறிய இடத்தில் இதுபோன்ற மூலிகைகளை வளர்த்து நீங்கள் பயன் பெறலாம். அழகுக்கு பயன்படக்கூடிய கற்றாழையை கூட உங்கள் வீட்டிலேயே நீங்கள் வளர்க்கலாம். கூந்தலுக்கு ஆரோக்கியம் தரும் செம்பருத்தி, மருதாணி போன்றவற்றையும் உங்களால் எளிதில் வளர்க்க முடியும்.

எனவே மேற்கூறிய செடிகளை உங்கள் வீட்டு மூலிகை தோட்டத்தில் வளர்த்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam