“ஏழு நாட்கள் ஏழு வித எண்ணெய்..!” – பூஜையால் கிடைக்கும் நன்மைகள்…!

ஏழு நாட்கள் ஏழு விதமான எண்ணங்களை பயன்படுத்தி உங்கள் பூஜையில் நீங்கள் விளக்கு ஏற்றி பூஜையை செய்வதின் மூலம் உங்கள் வீட்டுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.

அப்படி என்னென்ன எண்ணெய்களை நீங்கள் ஏழு நாட்கள் பயன்படுத்த வேண்டும். அந்த எண்ணெயால் நீங்கள் செய்யும் பூஜை மூலம் கிடைக்கும் பலன் என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஏழு நாட்கள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மற்றும் அதன் பயன்கள்

ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி தீபம் ஏற்றுவதன் மூலம் உங்களுக்கு வருமானத் தடை நீங்கி அதிக அளவு பணம் வரும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும்.

திங்கட்கிழமை அன்று இலுப்பை எண்ணெயை கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டுக்கு சுபிட்சம் ஏற்படும். குறிப்பாக அன்னபக்ஷி போட்ட விளக்கில் நீங்கள் தீபத்தை ஏற்றி வழிபடுவதின் மூலம் உங்களுக்கு சிறப்புகள் வந்து சேரும். மன அமைதியை இந்த விளக்கு உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் நீங்கள் மாகோலம் போட்டு அதில் தீபத்தை ஏற்றுவது நல்லது. இந்த தீபத்திற்கு நீங்கள் பசு நெய்யை உபயோகிப்பதால் உங்கள் வீட்டில் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குறிப்பாக கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். மேலும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

புதன்கிழமை அன்று நீங்கள் சங்கு வடிவத்தில் கோலத்தைப் போட்டு அதனை சுற்றி தீபங்களை ஏற்றுவது சிறப்பு இதனால் உங்கள் குழந்தைகளுக்கு இருக்கும். மந்த புத்தி நீங்கி கல்வியில் சிறப்பான நிலையை எட்டுவார்கள். இன்றைய தினம் நீங்கள் விளக்கு ஏற்ற நல்லெண்ணையை பயன்படுத்தினால் போதுமானது.

 வியாழக்கிழமைகளில் நீங்கள் தேங்காய் எண்ணெயைக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீப வழிபாடு உங்களுக்கு யாரிடமாவது பகை உணர்வை ஏற்படுத்தியிருந்தால் அந்தப் பகைமையை தீர்க்கும்.

வெள்ளிக்கிழமை அன்று மத்தால் கடைந்தெடுத்த வெண்ணையை உருக்கி நெய்யாக மாற்றி அதில் தீபம் ஏற்றுவது மிகவும் விஷேசமானது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையற்ற செலவுகள் குறையும் லட்சுமி கடாட்சம் வீட்டிற்கு ஏற்படும்.

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இதுபோல நீங்கள் விளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு ஏற்படும் உங்களுக்கு ஏற்படும் பித்ரு சாபங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam