ஹீரோ ஆன முதல் படத்திலேயே, மோதிரக்கையால் ‘குட்டு’ வாங்கிய சூரி

காமெடி நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம், ஹீரோவாக மாறிவிட்டார். குமரேசன் என்ற போலீஸ் கேரக்டரில் இவர், இந்த படத்தில் நடித்திருக்கிறார். இரண்டுபாகங்களாக வர உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம், நாளை (31ம் தேதி) வெளியாகிறது.

தமிழ் சினிமா இயக்குநர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். இவரது படங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடுகளம், வடசென்னை, விசாரணை படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம். யதார்த்த படங்களை தருவதிலும், அதற்கேற்ப காட்சியமைப்புகளை கொண்டு வருவதிலும் சிறந்த ஆற்றல் கொண்டவர். மனித இயல்புகளை, அதன் தன்மை மாறாமல், காட்சியமைப்புகளில் வெளிப்படுத்தும் இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர்.

அசுரன் படத்துக்கு பிறகு, சூரியை கதாநாயனாக வைத்து, விடுதலை படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில், மிக முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் ப்ரீவியூ ஷோ, படத்தில் பணியாற்றியவர்களுக்காக, காட்டப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த பலரும், விடுதலை படம் மிக சிறப்பாக உள்ளது; நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என, பாராட்டியுள்ளனர். குறிப்பாக, இசைஞானி இளையராஜா, சூரியின் நடிப்பு பிரமாதமாக உள்ளது, என வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவை பொருத்த வரை, யாரையும் அவ்வளவு எளிதாக பாராட்டி விட மாட்டார் இளையராஜா. ஏனெனில், சினிமாவில் முகஸ்துதிக்காக பாராட்டுபவர்களே அதிகம். தேவையின்றி, பிறரை புகழும், பாராட்டும் வழக்கம் இல்லாதவர் இளையராஜா. அந்த வகையில், சூரியை அவரே முன்வந்து பாராட்டி இருப்பது, சூரிக்கு ஹீரோவான முதல் படத்திலேயே மோதிரக் கையால் குட்டு வாங்கிய பெருமையைத் தந்திருக்கிறது

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …