நவரச நாயகன் கார்த்திக் மகன் இப்படிப்பட்டவரா?’ – காமெடி நடிகர் புகழ் சொன்ன ஆச்சரிய தகவல்

சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். இவரது காமெடி சேட்டைகள், சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது.

அயோத்தி. வலிமை, யானை, டான், எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். வரும் 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், நடிகர் புகழ் பேசுகையில்,
இந்த படத்தில், எனக்கு முக்கிய ரோல் தந்த, இயக்குநர் பொன்குமாருக்கு நன்றி. இந்த படம், என் வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். எனக்கு காமெடியே வராதா, என சிலர் என்னை கிண்டலாக பேசி இருக்கின்றனர்.

இந்த படத்தில், முக்கிய காட்சிகளில் சிரித்து, உடன் நடித்த மற்றவர்களை சிரிக்க வைத்துவிடக் கூடாது என கவனமாக இருந்தேன்.ஏனென்றால், படத்தில் காட்சிகள் அதனால், கதையின் களமே மாறிவிடும்.

கவுதம் கார்த்திக், ஜாலியான மனிதர். மிகப்பெரிய நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மகன் என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், ஜூனியர் நடிகர்களிடம் கூட மிக நட்பாக பழகி, ஆதரவாக நடந்துகொண்டார்.
படப்பிடிப்பு தளத்தில், ஒருமுறை அவர் அசைவ உணவு வகைகளை சாப்பிடவில்லை. அவரது உதவியாளர்கள், அவர் அசைவம் சாப்பிட மாட்டார், என்று கூறினர்.

சில தினங்கள் கழித்து பார்த்த போது, அவர் அசைவ உணவை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாகி விட்டது. அவரிடமே இதுபற்றி நேரடியாக கேட்டு விட்டேன்.

அப்போது, அவர் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்து விட்டது.
எனக்கு நடிக்கும் காட்சிகள் இருக்கும்போது, அசைவம் சாப்பிட்டு வயிற்றில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால், என்னால் தொடர்ந்து நடிக்க முடியாது. ஒரு மணி நேரம் வரை தாமதம் கூட ஆகலாம். இதனால், என்னுடன் அந்த காட்சிகளில் நடிக்க வேண்டிய மற்ற நடிகர்களின் நேரமும் வீணாகி விடும். அதனால், நான் சூட்டிங் நேரத்தில், அசைவம் சாப்பிட மாட்டேன் என்றார்.

இப்படி ஒரு தனித்தனமை கொண்டவராக, கார்த்திக் சார் மகன் இருப்பார் என நான் நினைக்கவில்லை. இந்த படத்தில் வேலை செய்தது, மகிழ்ச்சியளிக்கிறது, என்று சந்தோஷமாக தெரிவித்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam