“இந்த இரண்டு செடி போதும் பாஸ்..!” – உங்க வீட்டில் அதிர்ஷ்டத்தை சேர்க்க..!!

அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதில் செடிகள் மற்றும் மரங்களுக்கு அளப்பரிய பங்கு உள்ளது. எனவே தான் இன்றும் திருக்கோயில்களில் தல விருச்சங்கள் என்று சில மரங்களை வைத்து நாம் வழிபட்டு வருகிறோம். இதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் உங்கள் வீட்டில் இந்த இரண்டு செடிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிப்பதோடு செல்வத்தை வாரி வழங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அண்டாது. அப்படிப்பட்ட அந்த இரண்டு செடிகள் என்ன என்பது பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.

செல்வ வளத்தை அள்ளித் தரும் செடிகள்

செல்வ வளத்தை அள்ளித் தரும் செடிகளின் வரிசையில் நித்திய கல்யாணி மற்றும் செம்பருத்தி முக்கிய இடங்களை பிடித்துள்ளது. இந்த நித்திய கல்யாணி செடியை உங்கள் வீட்டில் வாசலில் நீங்கள் வைத்து வளர்க்கும் போது குடும்ப ஒற்றுமை மேலோங்குவதோடு மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் அதிகரித்து தரக்கூடிய நிலை ஏற்படும்.

மேலும் வீட்டில் மங்கலத்தை ஏற்படுத்தக்கூடிய நித்திய கல்யாணி செடியை உங்கள் வீட்டு வாசலில் வளர்ப்பதின் மூலம் கண் திருஷ்டி, தீய சக்திகள் போன்றவை அண்டாது. இந்தச் செடியின் பூவை உங்கள் பர்ஸில் வைத்து சென்றால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்.

அதுபோலவே செம்பருத்தி பூவை நீங்கள் உங்கள் வீட்டில் மேற்கு திசையில் வளர்ப்பதின் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். ஆன்மீக ரீதியாக செம்பருத்திப் பூவுக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த பூச்செடியை அவர்கள் வீட்டில் வைத்து வளர்க்கும் போது செவ்வாயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வீட்டுக்கு தேவையான நேர்மறை ஆற்றலை அதிகரித்து தரக்கூடிய ஆற்றல் இந்த செம்பருத்தி செடிக்கு உள்ளது. மேலும் இந்த செம்பருத்தி செடி லட்சுமி கடாட்சத்தை நமக்கு ஏற்படுத்தித் தரும். செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து வளர்க்கலாம்.

எனவே வீட்டில் எந்த விதமான குழப்பங்களும் நிலவாமல், நேர்மறை ஆற்றல் அதிகரிக்க நீங்கள் நித்திய கல்யாணி மற்றும் செம்பருத்தியை உங்கள் வீட்டில் வளர்த்துப் பாருங்கள். அமோகமான வாழ்க்கை உங்களுக்கு ஏற்படும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam