சமீபத்தில், விடுதலை படத்தை பார்த்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தை பார்த்துவிட்டு, வெற்றிமாறனை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் போலீஸ் துறையை கவனிப்பது தனது தந்தையான முதல்வர் ஸ்டாலின் என்பதை மறந்துவிட்டாரே, என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரெட் ஜெயின்ட் மூவி தயாரிப்பில், சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை பாகம் 1 வெளிவந்திருக்கிறது. இதன் பிரிவியூ ஷோ, படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட முக்கிய விஐபிகளுக்கு காட்டப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை பார்த்த உதயநிதி, மனம் மகிழ்ந்துபோய் உற்சாகத்தில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார்.
ஆனால், இந்த படத்தில் போலீஸ் செய்யும் தவறுகளை, குளறுபடிகளை, அவர்களது அராஜக செயல்களை வெற்றிமாறன் தோலுரித்துக் காட்டி இருப்பதாக தெரிகிறது.
தமிழக போலீஸ் துறை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அந்த துறை சார்ந்த அட்டூழியங்களை, வெற்றிமாறன் படமாக எடுத்திருப்பதை உதயநிதி ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் மகன் நடத்தும் சினிமா தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவீஸ் மூலமே, அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
ஒரு நடிகராக, இயக்குநரின் திறமையை பாராட்டிய உதயநிதி திமுக அமைச்சராக, மகனாக,தனது தந்தை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் துறையை பற்றி விமரிசித்து எடுத்திருக்கும் படத்தை பாராட்டி இருக்கிறாரே, என்றும் சமூகவலைவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், போலீஸ் துறையை பற்றி எந்த ஆட்சியில், யார் படம் எடுத்தாலும் உண்மை நிலையை இப்படித்தான் எடுக்க முடியும்,
ஏனென்றால், அந்த துறை அப்படித்தான் இருக்கிறது என்ற பொதுவான விமர்சனத்தையும் முன்வைக்கவே செய்கின்றனர்.