‘இவரு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு?’ – நடிகர் பார்த்திபனை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

சமீபத்தில், ரசிகர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், சொன்ன ஒரு தகவலை தான் இப்போது சர்ச்சையாக மாறி வருகிறது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 2, வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி, இரு தினங்களுக்கு முன் அந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், கமல்ஹாசன், மணிரத்னம் உட்பட படத்தில் நடித்த நட்சததிரங்களும் பங்கேற்றனர். பொன்னியின் செல்வன் படத்தில், சின்ன பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். 2ம் பாகத்திலும், அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் பார்த்திபன். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், நான் இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே பார்க்கவில்லை. அந்த படம் ரிலீஸ் ஆன அன்று, தஞ்சாவூரில் இருந்த போது, ரசிகர்களிடம் சிக்கிக்கொண்டேன்.

இன்னும் அந்த படத்தை பார்க்காமல் இருப்பது, மிகப்பெரிய ஆச்சரியமான செய்தி. முதல் பாகம் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. வரப்போகும் 2வது பாகத்தில் என்ன இருக்க போகிறது என்றும் தெரியாது. ஆனால், இந்த படங்களில் நான் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்.இதுபோன்ற வரலாற்று படங்களுக்கு மட்டுமின்றி, சாதாரண படங்களுக்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றார்.
இது, தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் பாகம் 1ல், பார்த்திபனுக்கு தரப்பட்டது சின்ன ரோல்தான். சரத்குமாரின் தம்பியாக சொற்ப காட்சிகளில்தான் அவர் வந்து செல்வார். மற்றபடி, அவருக்கு 2ம் பாகத்திலும், அந்த கேரக்டருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை.

அந்த விரக்தியை, வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக தான் அவர், முதல் பாகத்தையே பார்க்கவில்லை என்கிறார். பொன்னியின் செல்வம் முதல் பாகம் வெளியாகி, ஆறு மாதங்களாகியும் அவருக்கு பார்க்க நேரமே இருந்திருக்காதா, அதுவும் சினிமா பற்றியே பேசிக்கொண்டே பார்த்திபன், தான் நடித்த, மணிரத்னம் இயக்கிய படத்தை பார்க்காமல் இருப்பாரா? இவரு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு? என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …