சினிமா தியேட்டருக்குள் கேக் வெட்டிய கீர்த்தி சுரேஷ்

நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படம் இன்று ரிலீஸ் ஆனது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை, பல நாட்களாக கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, நானியுடன் நேனு லோக்கல் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த நிலையில், இந்த ஜோடிக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா, சாய்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்த படம், இன்று தியேட்டர்களில் வெளியானது.

அப்போது, ஒரு தியேட்டருக்கு சென்ற தசரா படக்குழுவினர் மற்றும் நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தியேட்டருக்குள் பார்வையாளர்களுக்கு மத்தியில், கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை ஆரவாரமாக கொண்டாடி இருக்கின்றனர்.

கேக்கை வெட்டிய கீர்த்தி சுரேஷ், அதை நானிக்கு ஊட்டி விடுகிறார். அந்த புகைப்படங்கள், இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். ரஜினியுடன் அண்ணாத்த, விஜயுடன் பைரவா, சர்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2 மற்றும் ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ஈ படத்தில் சமந்தாவுடன், நடிகர் நானி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி தெலுங்கில் பல படங்களில் நடித்து, வெற்றிப்பாதையில் முன்னணி நடிகராக இருக்கிறார் நானி.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …