“பெண்களின் கர்ப்பப்பை பலமாக வேண்டுமா? – அப்ப இந்த ஃபுட்ஸ் சாப்பிடுங்க..!

இன்று இருக்கும் பெண்கள் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து விட்டு துரித உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வதோடு அவர்களுக்கு ஏற்படும் வேலைபளு காரணமாக கர்ப்பப்பை பலமாக இருப்பது இல்லை.

அப்படிப்பட்ட கர்ப்பப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்து கர்ப்பப்பையை வலிமையாக்க கூடிய நமது பாரம்பரிய உணவுகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு நலம் தரும்.

அந்த வரிசையில் இன்று உங்களது கர்ப்ப பையை பலப்படுத்த  எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கர்ப்பப்பை பலம் செய்யக்கூடிய உணவு வகைகள்

கருப்பு உளுந்துக்கு உங்கள் கர்ப்பப்பையை பலம் செய்யக்கூடிய சக்தி உள்ளது. மேலும் உங்கள் இடுப்பு எலும்பை வலுவாக்கக்கூடிய அற்புத ஆற்றல் படைத்த இந்த கருப்பு உளுந்தை பொடி செய்து அதனோடு கருப்பட்டியும், நல்லெண்ணையும் சேர்த்து களி செய்து வாரம் ஒரு முறை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் கர்ப்பப்பை பலமாகும்.

என்ன பிரச்சனைகள் உங்கள் கர்ப்பப்பையில் இருந்தாலும் வாழைப்பூவை மோரோடு கலந்து ஜூஸாக்கி குடிப்பதின் மூலம் உங்கள் கருப்பை பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். இதனை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நன்மை தரும்.

இன்றைய இளம் தலைமுறை பெண்களிடையே அதிக அளவு காணப்படும் நீர்க்கட்டி பிரச்சனை மற்றும் பிசிஓடி பிரச்சனையை தீர்க்கக் கூடிய சக்தி இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு. எனவே கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் இந்த அரிசியை தினமும் சாப்பிட எளிதில் கரு தங்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சதகுப்பை பொருளை வாங்கி ஒரு ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் கர்ப்பப்பை வலிமையாக மாறிவிடும்.

இது பாரம்பரிய அரிசிகளான  காட்டுயானம், கருங்குருவை போன்ற அரிசிகளை தினமும் ஒரு நாள் உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாக மாறிவிடும்.

சீரற்ற மாதவிடாய் சரியாக்கவும் கர்ப்பப்பையை வலிமையாக மாற்றவும் கருஞ்சீரகத்தை நீங்கள் சுத்தம் செய்து  அதை நீரில் கலந்து குடிப்பது மிகவும் நல்லது.

வெந்தயம் உங்களது ஹார்மோன்களை சமன் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டதால் வெந்தயத்தை டீயாகவோ களியாகவோ உணவில் வாரத்தில் இரண்டு முறை சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கர்ப்பப்பைக்கு கிடைக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam