“உங்க முகத்தில் அங்கங்க முடி இருக்கா? – அப்ப பாட்டி வைத்தியத்த ஃபாலோ பண்ணுங்க..!

இன்று இருக்கும் பெண்களின் முகத்தில் தேவையில்லாமல் முடிகள் ஆங்காங்கு லேசாக வளர்ந்து விடுகிறது. இந்த முடிகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதற்காக பல விதமான சிகிச்சைகளை செயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் நீங்கள் இந்த சிகிச்சைகளை தவிர்த்து விடுவதால் வேண்டும்.

அப்படி இல்லாமல் நீங்கள் அதைத் தொடர்ந்து செய்யும்போது உங்கள் முகத்திற்கு பக்க விளைவுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் விரைவில் வயதான தோற்றத்தையும் பெறுவீர்கள்.

எனவே இயற்கையான முறையில் நாம் முகத்தில் இருக்கக்கூடிய அந்த முடிகளை நீக்கக்கூடிய எளிமையான பாட்டி மருத்துவ குறிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

முகத்தில் இருக்கும் முடியை நீக்க பாட்டியின் மருத்துவக் குறிப்புகள்

பெண்களின் முகத்தில் குறிப்பாக தாடை, மேல் உதடு போன்ற பகுதிகளில் வளர்கின்ற முடிகளை அகற்ற நீங்கள் நமக்கு கடவுள் கொடுத்த வரப் பிரசாதமான மஞ்சளை பயன்படுத்தலாம். இது உங்கள் தேவையில்லாத முடி பிரச்சனைக்கு நல்ல தீர்வை தரும். எனவே தினமும் மஞ்சளை உங்கள் முகத்தில் தேய்த்து குளிப்பதின் மூலம் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீங்கள் நீக்க முடியும்.

மேலும் எலுமிச்சம்பழ சாறினை எடுத்துக்கொண்டு அதனோடு சிறிதளவு சர்க்கரையை சேர்த்து உங்கள் முகத்தில் ஸ்கிரப்பரை போல் தடவ வேண்டும். இதனை தினமும் தொடர்ந்து ஒருமுறை செய்து வருவதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடி வளர்ச்சி குறைந்து மிக விரைவில் முடிகள் நீங்கி பளபளப்பாக முகம் காட்சியளிக்கும்.

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க வாழைப்பழத்தை மசித்து அதனோடு தேன் கலந்து நீங்கள் முகத்தில் ஒரு ஃபேஸ் பேக் போல தடவி விடலாம். அரை மணி நேரம் கழித்து இதை நீங்கள் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் தேவையில்லா முடி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

கடலை மாவை எடுத்து நீரிலோ அல்லது பாலிலோ குழைத்து உங்கள் முகத்தில் பூசி விடுங்கள். இந்த கலவை குறைந்த பட்சம் 10 நிமிடமாவது உங்கள் முகத்தில் இருக்கட்டும். இதனை அடுத்து நீங்கள் இளம் சூடான நீரில் உங்கள் முகத்தை கழுவுவதன் மூலம் விரைவில்  தேவையில்லாத முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.

மேற்கூறிய பக்க விளைவில்லாத வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் முடிகளை நீக்கி விடுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …