எந்த நடிகரின் கல்லறையிலும் எழுதப்படாத வாசகம் – குமரிமுத்துவின் கல்லறையில்..!

நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டிருக்கக் கூடிய வாசகங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த பிரபலமானவர் மறைந்த நடிகர் குமரிமுத்து.

கடந்த 1940 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் குமரிமுத்து கடந்த 1979 ஆம் ஆண்டு உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு கிட்டத்தட்ட தன்னுடைய 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தன்னுடைய 75 வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களை காண்பிக்கின்றன. குறிப்பாக இவருடைய நகைச்சுவை காட்சிகள் தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தன.

கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த இவர் கிறிஸ்துவம் சார்ந்த ஊழிய வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சில காலம் இன்று ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் நட்சத்திர பேச்சாளராகவும் பணியாற்றி இருக்கிறார்இவருக்கு அடையாளமே இவருடைய கண்களும் வித்தியாசமான சிரிப்பும் தான். கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகுக்கு பெரிய இழப்பாக கருதப்பட்டது. பல்வேறு முன்னணி நடிகர்கள் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வசனம் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதுதான் “இவருடைய சிரிப்பை கொண்டாடுவதற்கான நேரம் இது” என்று எழுதி இருக்கிறார்கள்.

பொதுவாக, கல்லறைகளில் அவருடைய பிறந்த வருடம் மற்றும் மறைந்த வருடம் மற்றும் அவருடைய தத்துவங்கள் ஏதாவது குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், இதில் சற்று வித்தியாசமாக பொறிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …