பாரம்பரியம் மற்றும் தைராய்டு, கர்ப்பம், உச்சந்தலையில் ஏற்படுகின்ற தொற்று, போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் உங்களது முடி மெலிந்து காணப்படும். அப்படி மெலிந்து இருக்கக்கூடிய முடி விரைவில் கொட்டி விடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது.
அப்படி கொட்டிய இடத்தில் முடி வளர நீங்கள் இந்த டிப்சை ஃபாலோ செய்தால் போதும்.இதன் மூலம் நிச்சயமாக ஏற்படக்கூடிய மாற்றத்தை பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
முடி கொட்டிய இடத்தில் முடி வளர சில டிப்ஸ்
டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் பெப்பர்மிண்ட் எண்ணெயை நீங்கள் முடி கொட்டிய இடத்தில் நேரடியாக தேய்க்கலாம். அல்லது இந்த எண்ணெயோடு தேங்காய் எண்ணெயையும் கலந்து தேய்க்க வேண்டும். அவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து உச்சந்தலையிலும், முடி கொட்டிய இடத்திலும் கேட்கும்போது விரைவில் அந்த பகுதியில் முடி முளைக்கும்.
முடி கொட்டிய பகுதியில் நீங்கள் வெங்காயச்சாறை எடுத்து நன்கு தேய்ப்பதின் மூலம் தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடியை வளர்க்கக்கூடிய உந்துதலை இதில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும்.
லேசாக தேங்காய் எண்ணெயை சூடு செய்து உச்சம் தலையில் மசாஜ் செய்வதின் மூலம் உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த முடியும். குறைந்தது தினமும் 10 லிருந்து 15 நிமிடங்கள் நீங்கள் உச்சம் தலையில் மசாஜ் செய்வதின் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வேர்க்கால்கள் உறுதியாகும்.
கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி முடி கொட்டிய இடத்தில் அதை தேய்ப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய என்சைம் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்களை தடுத்து விடுவதால் உங்கள் முடி வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கருவேப்பிலையில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின், புரதம், அமினோ அமிலங்கள் உங்கள் முடியை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் உதிர்ந்த இடத்தில் முடியை வளர வைக்கக்கூடிய தன்மையை கொண்டு உள்ளது.
எனவே கருவேப்பிலையை நன்கு அரைத்து கேர் மாஸ்காக நீங்கள் பயன்படுத்தும் கொட்டிய இடத்தில் முடி வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
மேலும் மருத்துவ ஆராய்ச்சியின் படி ரோஸ்மேரி எண்ணெய் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடியை வளர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே இந்த எண்ணெயோடு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் கலந்து முடிகளில் தேய்த்து வர கட்டாயம் உதிர்ந்த இடத்தில் முடி முளைக்கும்.