“வெஜிடபிள் கதம்ப சட்னி..!” – வித்தியாசமான சுவையில் அசத்த..!

வகை வகையான சட்னிகள், வகை வகையான டிபன்களுக்கு செய்து நாம் சாப்பிட்டிருப்போம்.சில சமயம் இந்த சட்னிகளை பார்க்கும்போது நமக்கு ஒரு மாதிரியாக தொடர்ந்து இதைத்தான் சாப்பிட வேண்டுமா என்ற எண்ணம் மேலோங்கும்.

அப்படிப்பட்ட நிலையில் சட்னிக்கு மாற்றாக ஒன்று தேவை என்று உறுதியாக நீங்கள் நினைத்தால் இந்த வெஜிடபிள் கதம்ப சட்னியை செய்து பாருங்கள். இது கட்டாயம் அனைவரும் விரும்பக் கூடிய விதத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் கூடுதல் சுவை கொடுத்து உங்களுக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத் தரும்.

அப்படிபட்ட இந்த வெஜிடபிள் கதம்ப சட்னி செய்வதற்கு  வெஜிடபிள் எது இருந்தாலும் பரவாயில்லை. இருக்கின்ற வெஜிடபிளை ஒரு கப் எடுத்துக்கொண்டு இந்த சட்னியை செய்து நீங்கள் அசத்தலாம்.

வெஜிடபிள் கதம்ப சட்னி செய்ய தேவையான பொருட்கள்

1.உளுந்து பருப்பு இரண்டு ஸ்பூன்

2.சின்ன வெங்காயம் 15 3.தக்காளி ஒன்று

4.இஞ்சி ஒரு துண்டு

5.பச்சை மிளகாய் 4

6.தேங்காய் துருவல் கால் கப்

7.சிறிதளவு புதினா மட்டும் கொத்தமல்லி

8.உப்பு தேவையான அளவு

9.நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

10.கடுகு ஒரு டீஸ்பூன் 11.காய்ந்த மிளகாய் இரண்டு

12.பெருங்காயம் கால் டிஸ்பூன்

13. நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

14.கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை அடுத்து அடுப்பை பற்றவைத்து ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி உளுந்து பருப்பை பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

 பிறகு இதனோடு சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.இவை வதங்கும் போதே தேவையான அளவு உப்பை போடும் பொழுது எளிதாக வதங்கிவிடும்.

பிறகு இதனோடு கழுவி வைத்திருக்கும் காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். மேலும் அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து விடுங்கள். கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு  சூடு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொருளை நீங்கள் வேறு ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை போட்டு அது வெடித்த பிறகு அந்த கலவையை பௌலில் இருக்கும் சட்னியில் கொட்டி விடுங்கள்.

இப்போது கலர்புல் கதம்பச் சட்னி தயார்.இதனை எதனோடு வேண்டுமென்றாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam