விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். விஜய் டிவியில் ஆஹா தொடர் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெய்வமகள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
வாணிபோஜன், தன் அழகிய தோற்றத்தாலும், திறம்பட்ட நடிப்பாலும் சினிமாத் துறையிலும் தன் காலடியை பதித்தார். லாக்கப், ஓ மை கடவுளே, மகான், காசிமேடு, ஆர்யன், லவ், காசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடித்தார்.
இதுதவிர சில வெப் சீரியல்களிலும், வாணிபோஜன் நடித்தார். அப்போது நடிகர் ஜெய் உடன் வெப் சீரியலில் நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.அதன்பின், நடிப்பில் போதிய கவனத்தை செலுத்தாமல், காதல் மயக்கத்தில் ஜெய் உடனே எப்போதும் ககாணப்பட்டார் வாணிபோஜன்.
இந்நிலையில், இவரை தேடிவந்த பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் அனைத்தும் கைநழுழுவிப்போனது. ஏற்கனவே, ஜெய் உடன் காதலில் விழுந்த அஞ்சலி, ஒரு காலகட்டத்துக்கு பிறகு, சினி பீல்டை விட்டே காணாமல் போனார்.
அதன்பிறகு, தன்னை சுதாரித்துக்கொண்டு ஐட்டம் பாடல்களில் ஆடி, தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சித்தார். தமிழ் சினிமா கண்டுகொள்ளாத நிலையில் தெலுங்கில், சில படங்களில் நடித்து வருகிறாா்.
சில மாதங்களுக்கு முன் இந்த உண்மையை உணர்ந்துகொண்ட வாணி போஜன், தனக்கும் அஞ்சலி நிலை வந்துவிீடுமோ என்பதை புரிந்துகொண்டு, ஜெய்யை விட்டு அதிரடியாக விலகினார்.
இதையடுத்து, தனது கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு., இளசுகளை சூடேற்றி விடுகிறார். சமீபத்தில் வாணிபோஜன் வெளியிட்ட இ்ந்த படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.