புரட்சித் தலைவர் MGR சினிமா நடிகராக மக்களின் மனங்களை வென்று, தமிழக முதல்வராக ஆட்சியை பிடித்தவர். அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், எம்ஜிஆரின் புகழின் வெளிச்சத்தில்தான், மக்களின் ஆதரவை பெற்றார். ஆனால், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி, தனது கடைசி காலம் வரை, தமிழகத்தை ஆட்சி செய்தார்.
சின0ிமாவை போலவே, ஆட்சி, அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோவாகவே வெற்றி பெற்றார். அவருக்கு பிறகு, நடிகராக வந்த யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
ஆனால், எம்ஜிஆர் ஆட்சி, அதிகாரம் என்று இருந்த போதிலும், சினிமா மீதான தனது கலை தாகத்தை எப்போதும் அவர் அலட்சியப்படுத்தியது இல்லை. அதுகுறித்த ஒரு தகவல் இப்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எம்ஜிஆர் நடிகர், அரசியல் தலைவர், முதலமைச்சர் என்பதை கடந்து, அவர் தீவிர வாசிப்பாளர். நல்ல நல்ல புத்தகங்களை விரும்பி படிப்பவர். அப்படி படித்ததில் அவருக்கு மிகவும் பிடித்த, ரசித்த நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் தயாரிக்க விரும்பி இருக்கிறார். பாரதி ராஜாவை, அந்த படத்தை இயக்க வைக்கவும் வந்திய தேவனாகவும் கமல்ஹாசனும், குந்தவையாக ஸ்ரீதேவியும் நடிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
இந்த தகவலை, இரு தினங்களுக்கு முன் நடந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இசை வெளியீட்டு விழாவில், வெளிப்படையாக மேடையில் தெரிவித்தார் பாரதிராஜா.