பாண்டியராஜன் மனைவியை பார்த்துள்ளீர்களா..? – அட இவங்களா..? – வைரல் போட்டோஸ்..!

இயக்குநராக, நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் பாண்டியராஜன். இயக்குநர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை துவக்கியவர், கன்னிராசி படம் மூலம் இயக்குநராகி தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார்.

கடந்த 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாண்டியராஜன். வாசுகி வேறு யாரும் அல்ல, புகழ்பெற்ற இயக்குனரும், தயாரிப்பாளருமான அவினாசி மணியின் மகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்பாவம், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து, காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

இயக்குநராக, நடிகராக பாண்டியராஜன் மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தார். சமீபத்தில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், குஷ்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இன்று, பாண்டியராஜனுக்கு திருமண நாள். குடும்பத்தினருடன் அந்த மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார். பாண்டியராஜனும், அவரது மனைவி வாசுகியும் பூமாலைகளை கழுத்தில் அணிந்து, தங்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை, பாண்டியராஜனின் மகன் பிருதிவிராஜ், தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதை பார்த்த பாண்டியராஜனின் நண்பர்களும், உறவினர்களும், சினிமாத்துறை சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படடங்களும் வேகமாக பரவி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …