இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை. தினமும் உங்களது ராசி பலனை முதலில் அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நீங்கள் நடப்பதின் மூலம் உங்களுக்கு அன்றைய தினத்தில் தேவையான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். அதுபோல சந்திராஷ்டம தினத்தில் நீங்கள் வாய் பேசாமல் மௌனமாக இருப்பதின் மூலம் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் ஏற்படும்.

எனவே ஜோதிடம் கூறுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நடந்து உங்களுக்கு உரிய அனைத்தையும் வெற்றிகரமாக பெறுவதற்கும், தடங்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய பரிகாரங்களைக் கொண்டு நீங்கள் முக்கிய கடவுள்களை வழிபடுவதால் உங்களுக்கு சுப பலன்கள் கிட்டும். அந்த ஜோதிடத்தின் அடிப்படையில் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் சம நிலையை இழக்க நேரிடும். பொறுமையாகவும், நம்பிக்கையோடும், காத்திருத்தல் மூலம் உங்கள் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகரித்து இருக்கும் .திறமையோடும், கவனத்தோடும், பணியாற்ற சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவே இருக்கும். தேவையற்ற செலவுகள் வந்து சேரும். எனவே கையிருப்பு குறைவதைக் கண்டு உங்கள் மனம் வேதனை அடையும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்படலாம் இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதற்கு வாய்ப்புகளே இல்லை எனக் கூறலாம். வளைந்து கொடுத்து நீங்கள் நேர்ந்து கலந்து போவதின் மூலம் மட்டுமே உங்களால் நல்ல பலன்களை காண முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவது மூலம் மட்டுமே பணிகள் விரைவாக முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்தி கரமாக இல்லை. பண இழப்புக்கு அதிக அளவு சாத்திய கூறுகள் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாள் அல்ல. தலைவலி முதுகு வலி ஏற்படும். தியானத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த வழிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே என்று உங்கள் முயற்சிகளின் மூலம் வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய நாள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்கள் பணியில் உங்களது தனி திறமை வெளிவரும். உங்கள் செயல் திறனை பார்த்து அனைவரும் வியப்பார்க.ள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு நல்ல முறையில் கிடைக்கும். குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறலாம். பண புழக்கம் அதிகரித்து இருக்கும் .எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த குறைபாடும் இல்லாத நாள் என்பதால் நீங்கள் முழு ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

கடகம்

 கடக ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமை மற்றும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. உங்கள் அணுகுமுறையில் வேகம் இருக்கக் கூடாது விவேகமே தேவை. உங்கள் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் வெற்றி பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகள் அதிகமாக இன்று இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. எனவே உணர்ச்சிவசப்படாமல் உங்கள் பணியை கவனத்தோடு செய்யவும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சீராக இல்லை. தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனால் உங்களுக்கு மன வருத்தம் வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சுமாரான நாள் என்று கூறலாம். ஆற்றல் குறைந்து இருக்கு. உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் சற்று ஓய்வாக இருக்கவும்.

சிம்மம்

சிம்மராசி நண்பர்களே இன்று மிதமான பலன்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். பொறுப்புக்கள் கூடுதலாக இருப்பதால் அதற்காக நீங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டி இருக்கும். மனதில் அதிக அளவு குழப்பங்கள் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிக பணிகள் இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுங்கள் கட்டாயம் நன்மை கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கூடுதல் செலவுகள் காணப்படும் .உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்ணில் எரிச்சல் ஏற்படலாம். கண்களை வருத்திக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொள்ளவும். உற்சாகமான மனநிலையை நீங்கள் வளர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தரும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். பிறளுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் நீங்கள் திறமையாக பணி செய்ய முடியாது. உங்களுக்கு ஏமாற்றமும், தடைகளும் ஏற்படும். சக பணியாளர்களுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்காது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் இன்று வந்து சேரும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி சிக்கனமாக இருப்பதற்கு முயற்சி செய்வது நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே தண்ணீரை குடித்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே என்று உங்கள் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு உறுதியாக செயல்படுவீர்கள். உங்களின் நம்பிக்கை உணர்வு உங்களை உச்சத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணியில் முன்னேற்றம் ஏற்படும் .உங்கள் வளர்ச்சிக்காக புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று அதிர்ஷ்டகரமான நாள் என்று கூறலாம். உங்கள் கையில் இருக்கும் உபரியான பணத்தைக் கொண்டு நீண்டகால திட்டத்தை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனதை ஆற்றல் அதிகரித்து இருப்பதால் இங்கு ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கக்கூடிய நாளாகும். உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமையாக நீங்கள் நினைப்பீர்கள். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் பணியாற்றுவதை எளிதாக உணர்ந்து பணியாற்றுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறலாம். புதிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். இந்த நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆற்றலோடு இருக்கக்கூடிய உங்களின் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறையும் இல்லை. எனவே ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்கள் இன்று எதிர்பாராத நிச்சயமற்ற பலன்கள் உங்களுக்கு ஏற்படும்.இன்று நன்மை மற்றும் தீமை இரண்டு பலன்களும் கலந்து கிடைப்பதால் இன்றைய நாள் சவாலாக இருக்கும். எனவே பொறுமையாக எதையும் கையாளவும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று கவன குறைவாக இருந்தால் உங்கள் பணிகளில் தவறு நடக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். திறமையோடு பணிகளை செய்து முடிக்க முயற்சி செய்யவும். மேலும் கூடுதல் கவனம்  தொழில் ஸ்தானத்தில் தேவை.

நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் எதிர்கால பாதுகாப்பு கருதி உங்கள் பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சோர்வு, அமைதியின்மை உங்களிடம் காணப்படும். சத்தான உணவை உட்கொள்வதின் மூலம் சோர்வை விரட்டி அடிக்கலாம்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று அதிக சிந்தனையோடு நீங்கள் இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டால் எளிதில் வெற்றி பெற முடியும். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதற்காக தியானம், யோகா போன்றவற்றை நீங்கள் செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். இதனால் உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பணி சவால் நிறைந்ததாகவே இருக்கும். எனவே நீங்கள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளதால் பணியில் கவனத்தை செலுத்துவதும் மிகவும் நல்லது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. தொலை தூரத்தில் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவை பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் குறித்த நேரத்தில் மிதமான உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் இலக்குகளை அடைவதற்கு உரிய நாள் என்று கூறலாம். எளிதாக உங்களுடைய இலக்குகளை நீங்கள் இன்று அடைந்து விடுவீர்கள். அடிக்கடி பயணம் போகக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். இதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். உங்கள் பணியை உற்சாகமாகவும் விரைவாகவும் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறலாம். உங்களின் கடின உழைப்புக்கு கூடுதல் பணம் கிடைக்கும். ஊக்கத்தொகைகள் வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுறுசுறுப்புடனும் ஆற்றலோடும்  இருப்பீர்கள். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை.ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் சுறுசுறுப்பான நாள் என்று கூறலாம். உங்களுடைய இலக்குகளை மிக விரைவில் அடைவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகளை எளிதாக பெற முடியும். உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் நீங்கள் இன்று இருப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களின் ஆதரவும் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் உங்களது செயல் திறன் மேலோங்கி காணப்படும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும். உங்களிடம் காணப்படும் உபரி பணத்தை நல்ல விஷயங்களுக்கு நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை நலமாக உணர்வீர்கள். இன்று உங்களது ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருப்பதால் அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …