“வீட்டிலேயே ஈஸியாய் பன்னீர் கிரேவி..!” – பிள்ளைகள் சாப்பிட இப்படி செய்யுங்க..!

பன்னீரைக் கொண்டு செய்யப்படுகின்ற உணவு பண்டங்களை ஹோட்டல்களில் மட்டுமே அதிக சுவையாக சாப்பிட முடியும் என்று எண்ணம் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு உள்ளது.

அந்த எண்ணத்தை தகர்த்து எறிய கூடிய வகையில் நீங்கள் உங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் பன்னீரைக் கொண்டு உணவு பண்டங்களை செய்து அசத்தலாம்.

அந்த வகையில் இன்று உங்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு பிடிக்கும்மாறு பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

1.பன்னீர் 200 கிராம்

2.சின்ன வெங்காயம் உரித்தது 15

3.தக்காளி இரண்டு

4.கொத்தமல்லி ஒரு டீஸ்பூன்

5.வரமிளகாய் இரண்டு

6.பச்சை மிளகாய் ஒன்று

7.வெண்ணெய் சிறிதளவு

8.நெய் 50 கிராம்

9.முந்திரிப்பருப்பு நான்கு

10.தேங்காய் கால் கப்

11.பட்டை ஒரு சிறு துண்டு

12.கிராம்பு இரண்டு

13.ஏலக்காய் ஒன்று

14.இஞ்சி

15.பூண்டு

செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்யை விட்டு அதில் பட்டை, கிராம்பு,இஞ்சி. பூண்டு,சின்ன வெங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய் போன்ற  போட்டு பொன் நிறமாக வதக்கிக் கொள்ளவும்.

 இதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தக்காளியை நன்கு கழுவி நறுக்கி அதனோடு போட்டு வதக்கவும்.இந்த கலவை நன்கு வதங்கிய பிறகு முந்திரிப் பருப்பை இதனோடு போட்டு விடுங்கள். பிறகு இந்த கலவையை ஒரு தட்டத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது சூடு ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.

இதனை அடுத்து அந்த வாணலியிலேயே மீண்டும் சிறிதளவு நெய்யை விட்டு வாங்கி வைத்திருக்கும் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் போட்டு பொன் நிறமாக வறுத்து மற்றொரு சட்டத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் வதக்கி வைத்திருக்கும் மசாலா கலவை சூடு ஆறியிருக்கும். இதனை நீங்கள் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை மீண்டும் அதே வானிலையில் சிறிதளவு நெய்யை சேர்த்து போட்டு லேசாக சூடான உடன் அரைத்து வைத்திருக்கும் மசால் கலவையை சேர்த்து விடுங்கள்.

 இந்த கலவை நன்கு கொதித்து பச்சை வாசம் போகும் வரை காத்திருக்கவும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் வெண்ணெயை இதன் மேல் போட்டு நன்கு கிளறி விடவும். இரண்டு மூன்று நொடிகள் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

 தேவை எனில் கொத்தமல்லி இலைகளை இதன் மேல் தூவி அலங்கரிக்கலாம். இப்போது சுவையான பன்னீர் கிரேவி தயார். இதனை சப்பாத்தியோடு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam