ஸ்ருதிஹாசன் முதலில் காதலித்தது இவரையா..? – ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். நடிகை, பாடகி, டான்ஸர், மாடலிங் என பன்முக திறமையும், கலையார்வமும் கொண்டவர். அதே வேளையில், முற்போக்கு சிந்தனைகள் கொண்ட கமல்ஹாசனின் மகள் என்பதால், தந்தையை போலவே, இவரும் பொதுவெளிகளில் எதையுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆனால், காதலனுடன் கொஞ்சியபடி இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்புகூட காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை டிரெண்டிங் ஆக பரவ விட்டிருந்தார் ஸ்ருதிஹாசன்.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்ருதிஹாசன், தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார். இப்போது, பிரபாஸ் உடன் சலார் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இளம் வயதி்ல், அதாவது டீன்ஏஜ் காலகட்டத்தில், தான் காதலிக்க ஆசைப்பட்ட நபர் குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்து, அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து தந்திருக்கிறார்.

அதாவது முதன்முதலில் ஸ்ருதிஹாசன் மனதை கவர்ந்தது பாலிவுட் நடிகர் புரூஸ் லி தானாம். அவர் நடித்த படங்களில், புரூஸ் லி ஆக்ரோஷமான சண்டை காட்சிகளையும், அந்த காலகட்டத்திலேயே சிக்ஸ் பேஸ் உடற்கட்டில், அழகான வாலிபராக காட்சியளித்த புரூஸ் லியிடம் மனதை பறிக் கொடுத்திருக்கிறார் உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசன்.

ஒருவேளை, இப்போது புரூஸ்லி தோற்றத்தில் யாரும் நடிகர் இருந்தால் ஸ்ருதிஹாசனை தைரியமாக அணுகலாம். நிச்சயம், அவரை திருமணம் செய்துகொள்ள ஸ்ருதி, உடனடியாக பச்சைக்கொடி காட்டி விடுவார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …