கோயில் இல்லாத ஒரு குடியிருக்க வேண்டாம் என்பது மூத்தவர்களின் வாக்காக உள்ளது. அது மிகவும் உண்மையான ஒன்று தான்.எனவே தினமும் கோயிலுக்கு செல்வதால் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு வந்து சேர்கிறது.
அந்த வரிசையில் நீங்கள் கோயிலில் இருக்கக்கூடிய கொடிமரத்தை எப்படி வணங்க வேண்டும். அதை வழிபடக் கூடிய முறைகள் என்ன என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோயில் கொடி மரத்தை வணங்கும் முறை
கோயிலில் இருக்கும் கொடி மரத்தை நேராக பார்த்து நீங்கள் வழிபடாமல் சற்று ஓரமாக நின்று வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
கொடி மரத்தை உங்கள் கைகளால் தொட்டு வணங்கிய பின் சுற்றி வந்து வணங்குவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நீங்கள் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து வணங்கும்போது உங்கள் கால்கள் இருக்கும் பகுதியில் எந்த ஒரு தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. அதனை பார்த்து தான் நீங்கள் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
ஆண்கள் எப்போதும் கொடி மரத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதுபோல பெண்கள் விழுந்து வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்தால் போதுமானது.
பொதுவாக கொடிமரம் இருக்கும் பகுதியில் தான் அதிக அளவு யாகங்களை செய்வார்கள்.எனவே அந்த கேள்விகளால் உருவாகும் கதிர்கள் அனைத்தும் இந்த கொடி மரத்திற்கு அருகாமையில் இருப்பதால்தான் அந்த கதிர்களால் தாக்குதல் மனிதர்களுக்கு ஏற்படக் கூடாது என்று ஒதுக்கமாக நின்று வணங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
தம்பதிகளாக கோயிலுக்கு செல்லும்போது இருவரும் இணைந்து தான் கொடி மரத்தை வணங்க வேண்டும். தனித்தனியாக வணங்குவது அவ்வளவு சிறப்பானது அல்ல.
கொடி மரத்தை வணங்கி செல்வதால் உங்கள் உடலில் இருக்கும் உபாதைகள் நீங்குவதோடு குடும்பத்திற்கு செல்வ செழிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
எனவே மறவாமல் மேற்கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் கொடி மரத்தை இனி வணங்கி சகலவித சௌபாக்கியத்தையும் பெறுங்கள்.