உங்கள் வீடுகளில் உங்கள் சமையலை மண மணக்க வைக்கும் கொத்தமல்லித்தழையை நீங்கள் வாங்கி வந்து நல்ல முறையில் பத்திரப்படுத்தி வைத்தாலும் எப்படியும் அது சில நாட்களிலேயே அழுகி விடுகிறது.
அதுமட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் இதன் இலைகள் உடனே பழத்து விடும். இதனை நீங்கள் உங்கள் வீட்டு பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்தாலும் இரண்டு நாட்களில் இதன் நிலைமை இப்படித்தான் போகும்.
அப்படி வீணாக குப்பை தொட்டிக்கு போகும் கொத்தமல்லி தழையை நீங்கள் நாங்கள் கூறும் டிப்ஸை பயன்படுத்தி பத்திரப்படுத்துவதின் மூலம் வாரத்தில் ஏழு நாட்களும் கொத்தமல்லி இலையை நீங்கள் பிரஸ்சாக பயன்படுத்த முடியும்.
கொத்தமல்லி தழை நீண்ட நாள் வாடாமல் இருக்க உதவும் குறிப்புக்கள்
நீங்கள் கொத்தமல்லி தழையை வாங்கி வந்ததும் அதை ஒரு திசு பேப்பரில் வைத்து ஈரத்தை நன்றாக உறிஞ்சி எடுத்து விடும் அளவுக்கு விட்டு விடுங்கள்.
அப்படி உங்களிடம் திசு பேப்பர் இல்லை என்றால் வெள்ளை நிற பருத்தி துணியில் நீங்கள் போட்டு ஈரத்தை அப்படியே எடுத்து விடலாம்.
ஈரம் நீக்கப்பட்ட கொத்தமல்லி தழையை நீங்கள் இலை தனியாக, தண்டு தனியாக என தனித்தனியாக வெட்டி எடுத்து விடுங்கள்.
இதன் பிறகு தண்டு பகுதியை ஒரு கண்டெய்னரிலும், இலைப்பகுதியை மற்றொரு கண்டெய்னரலும் நீங்கள் ஸ்டோர் செய்து உங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்.
அப்படி உங்கள் பிரிட்ஜில் வைக்கும் போது நீங்கள் தனித்தனியாக வைத்திருக்கும் அந்த கொத்தமல்லி இலையின் மேலும், கீழும் ஒரு திசு பேப்பரை வைத்து நன்கு மூடி உள்ளே வைத்து விடுங்கள்.
இப்படி நீங்கள் செய்வதின் மூலம் நீங்கள் வாங்கி வந்த கொத்தமல்லித்தழை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். நீங்களும் உங்கள் சமையலை மனமணக்க செய்வதற்கு எந்த கொத்தமல்லி தழை உறுதுணையாக இருக்கும்.
நீங்களும் இந்த டிப்சை கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு இது உதவிகரமாக இருப்பதோடு நீண்ட நாட்கள் உங்கள் கொத்தமல்லியை அப்படியே பாதுகாக்க வைத்திருக்க உதவி செய்யும்.