“இஞ்சி இருக்க பயமேன்..!” – நன்மைகள் என்ன தெரியுமா?

தினமும் இஞ்சியை ஒரு குறிப்பிட்ட அளவு நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடம்புக்கு என்னற்ற நன்மைகள் வந்து சேர்கிறது. குறிப்பாக இஞ்சியில் அலர்ஜியை எதிர்க்கக்கூடிய எதிர்ப்புத்தன்மை அதிக அளவு உள்ளது.

 மேலும் இது ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நோய்களை விரைவாக குணம் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது.

எனவே இஞ்சியை நீங்கள் உங்கள் செரிமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். இது குடல் எரிச்சலை நீக்கக்கூடிய தன்மை உள்ளது .அதுமட்டுமல்லாமல் உமிழ் நீர், பித்த உற்பத்தியை அதிகரித்து இரைப்பை சுருக்கங்களை குறைக்க உதவி செய்வதால் செரிமான பிரச்சனைகளுக்கு  சிறப்பான மருந்தாக இது திகழ்கிறது.

தசை பிடிப்பால் உங்களுக்கு வலி ஏற்பட்டால் இஞ்சி சாறை அந்த பகுதியில் நீங்கள் பிழிந்து தடவி விடலாம். அதன் மூலம் உங்கள் தசை வலி எளிதில் குறையும். உடற்பயிற்சியினால் ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கும் இது ஒரு மிகச்சிறந்த நிவாரணி என்று கூறலாம்.

ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரை அளவை இது குறைப்பதாக ஈரான் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் இஞ்சி சர்க்கரையை எந்த அளவு குறைக்க உதவி செய்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள்.

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலியை குறைப்பதற்கு இஞ்சிச்சாறு பயன்படுகிறது. எனவே நீங்கள் மாதவிடாய் காலத்தில் சிறிய அளவு இஞ்சிச்சாறினை பருகுவதின் மூலம் அந்த வலிகளில் இருந்து நீங்கள் எளிதில் விடுபட முடியும்.

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற கணைய புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகவும் புற்று நோயை எதிர்க்கக்கூடிய ஆற்றல்மிக்க பொருளாக இஞ்சி திகழ்கிறது.

மூளையின் செயல்பாட்டை குறைக்கக்கூடிய அல்சைமர் என்ற நோயிலிருந்து மூளையை பாதுகாப்பது இஞ்சிக்கு மிக சிறப்பாக பணி புரிகிறது.

உடலில் இருக்கின்ற கெட்ட கொலஸ்ட்ரால்கள் மற்றும் கிளிசரைடுகளை குறைக்கக்கூடிய ஆற்றல் இஞ்சிக்கு உள்ளதால் இது தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவி செய்கிறது.

எனவே இஞ்சி சாறை வாரம் ஒரு முறை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பசி இன்மை உணர்வு நீங்கி உங்கள் உடலுக்கு தேவையான சக்தியை பெற உதவி செய்யும்.

சோர்வாக இருக்கக்கூடிய சமயங்களில் நீங்கள் இஞ்சியை டீயாக குடிப்பதன் மூலம் வெகு விரைவில் உங்களுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து சோர்வு நீங்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …