“ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பீநட் பட்டர்..!” – அள்ளி சாப்பிடு ராஜா..!

சந்தைகளில் சக்கை போடுகின்ற பீநட் பட்டர் சாப்பிடுவதால் நன்மை ஏற்படுகிறதா? தீமை ஏற்படுகிறதா? என்று தெரியாமல் சிலர் தவிர்த்து வருகிறார்கள். அவர்களின் தவிப்பை தீர்ப்பதற்காக பீநட் பட்டரின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக இந்த பீநட் பட்டர் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளை கொண்டிருப்பதால் நன்மையைத்தான் நமக்கு தருகிறது என்று கூற வேண்டும்.

பீநட் பட்டர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பும்  அனைவருமே நார் சத்து நிறைந்த இந்த பீநட் பட்டரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களது உடல் இளைப்பதோடு உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை விரைவாக அளிக்கும்.மேலும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டது.

உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான வைட்டமின் ஈ யை அதிகளவு இந்த பீநட் பட்டர் கொண்டு இருப்பதால் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து உங்களை பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

இளம் தலைமுறைகிடையே அதிக அளவு காணப்படக்கூடிய பித்தப்பை கற்களை தடுத்த கூடிய ஆற்றல் இந்த பீநட் பட்டருக்கு உள்ளது. மேலும் பித்த பை சம்பந்தப்பட்ட நோய்களை இது குறைக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே வாரத்தில் இரண்டு முறை இந்த பீநட் பட்டரை நீங்கள் உங்கள் உணவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதியாக பாதுகாக்கும் தன்மை இந்த பீநட் பட்டரில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியத்திற்கு உள்ளதால் 30 வயது மேற்பட்ட பெண்கள் இதை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

அல்சைமர் நோயை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த பீநட் பட்டரில் உள்ள நியாசினுக்கு உள்ளது. இதுவும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நீங்கள் அவசியம் இதனை சாப்பிடுங்கள்.

எனவே மேற்கூறிய சிறப்புக்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் பீநட் பட்டரை பயப்படாமல் இனி வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தினால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam