ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு இந்த வேலை தேவையா..? – என்ன செஞ்சிருக்கார் பாருங்க..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் நடிப்பாற்றல் மிக்க நடிகையாக வலம் வருகிறார். கிளாமர் லுக் இல்லாத நிலையில், மிக யதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். ரம்மி, பத்மினியும் பண்ணையாரும், நம்ம வீட்டுப்பிள்ளை, கனா, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, வடசென்னை, வானம் கொட்டட்டும், செக்கச் சிவந்த வானம், காக்கா முட்டை, தர்மதுரை, ஆறாது சினம் என, இவர் நடித்த பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவரது சகோதரர் மணிகண்டன். விஜய் டிவியில் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். கடுமையான போட்டியாளராக இருந்து, சக போட்டியாளர்களுக்கு டப் கொடுத்தார். ஸ்ட்ராங்க் கன்டஸ்டண்ட் என, மற்றவர்கள் இவரை குறிப்பிட்டு சொல்லி வந்தனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் 84 நாட்கள் தாக்குப்பிடித்த மணிகண்டன், அதன்பிறகு வெளியேறினார். டைட்டில் வின்னர் மணிகண்டனாக இருக்கலாம் என, பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் 4 முறை தலைவராக வெற்றி பெற்றது மணிகண்டன்தான்.

இந்நிலையில், மை டியர் டயானா என்ற வெப் சீரிஸில், மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான படத்துவக்க பூஜை நடந்தது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று, படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளார்.

சினிமா வாய்ப்பு கிடைக்காத போதும், வெப் சீரிஸ் வாய்ப்பு மூலம் தனது திறமையை மணிகண்டன் வெளிப்படுத்துவார். அதன்மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்து, தங்கையை போல, அண்ணனும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரா… என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …