ராஜ மரியாதையுடன் சூரியாவின் குழந்தைகள் – பூட்டிய கேட்டின் வெளியே மொட்டை வெயிலில் பள்ளி குழந்தைகள்..!

திரைப்பட நடிகர் சூரியா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கு இன்று நேரில் பார்வையிட சென்றிருந்தனர். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் இன்ன பிற அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.

சூர்யா குடும்பத்தினர் அருங்காட்சியகத்தில் சுற்றுப்பாற்றிக் கொண்டிருந்த பொழுது அருங்காட்சியகம் தற்காலிகமாக ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து நேரில் பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து முதல் 12 வயது உள்ள சிறுவர்களுக்கு பத்து ரூபாய் எனவும் பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா அவரது மனைவி நடிகை ஜோதிகா நடிகர் சிவகுமார் உள்ளிட்ட ஒரு நேரில் பார்வையிட்டனர்.

அப்போதுஅவர்களின் உறவினர்களும் உடன் வந்திருந்தனர் சூர்யா குடும்பத்தினர் வருகையால் அதிகாரிகள் கீழடி அருங்காட்சியகத்தை தற்காலிகமாக ஒன்றரை மணி நேரம் மூடி இருக்கின்றனர்.

இதனால் அருங்காட்சியகத்தை பார்க்க வந்த பொதுமக்கள் கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரம் வெயிலில் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை பெற்று இருக்கிறது.

கோவிலில் நுழைய அனுமதி மறுத்தால் மட்டும் தான் தீண்டாமையா..? இப்படி பிரபலங்களின் பெயரைச் சொல்லி ஒரு பொது இடத்தை ஒன்றை மணி நேரம் மூடி வைப்பது மட்டும் இல்லாமல் பொது மக்களை ஒன்றரை மணி நேரம் வெயிலில் காக்க வைத்தது என்ன வகையில் நியாயம் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam