பெண்களுக்கு பொதுவாகவே அந்த நான்கு நாட்கள் ஏன் பிறந்தோம் என்று கூறக்கூடிய அளவுக்கு வலிகளையும், வேதனைகளையும் அனுபவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தான் உடல் பலம் இருந்தாலும் மன பலத்தை இழந்து, மன அழுத்தத்தோடு அந்த நான்கு நாட்களை கடத்துவார்கள்.
எனவே பெண்கள் மாதவிடாய் நாட்களில் கீழே கொடுக்கப்பட்டிருக்க கூடிய காய்களை அவர்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வதின் மூலம் எப்போதும் இருப்பது போல சுறுசுறுப்பாக அந்த நாட்களிலும் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.
அதற்கு நீங்கள் எத்தகைய காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான, விளக்கமான கட்டுரையை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதவிடாய் நாட்களில் உண்ண வேண்டிய காய்கள்
பெண்கள் மாதவிடாய் நாட்களில் அதிகளவு கொத்தவரங்காயை உணவில் சேர்த்திக் கொள்வதின் மூலம் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் அந்த நான்கு நாட்களில் அவர்கள் வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற வாழை குடும்பத்தைச் சேர்ந்த உணவுப் பொருட்களை அதிகளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் கர்ப்பப்பை வலிமையாகும். கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய புண்களை ஆற்றக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
உங்கள் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முளைகட்டிய பயிறு வகைகளை ஒரு நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள்.
இறைச்சி, தேன், பேரிச்சம்பழம் இவை மூன்றையும் அந்த நான்கு நாட்கள் உங்கள் உணவில் கட்டாயப்படுத்தி விடுங்கள் உங்கள் ஆற்றல் கூடுதலாக அது உதவி செய்யும்.
மேலும் கீரை வகைகளை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ப்ரோக்கோலி, மீன் போன்றவற்றை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் சோம்பல் அகன்று சுறுசுறுப்பு ஏற்படும்.
அந்த நான்கு நாட்களும் நீங்கள் அதிக அளவு தண்ணீரை அருந்த வேண்டும். இதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
எனவே மேற்கூறிய இந்த காய்களையும், மாமிசங்களையும் உங்கள் உணவுகளில் சேர்த்து வர அந்த நான்கு நாட்களை எளிமையாகவும், சுறுசுறுப்பாகவும் நீங்கள் மாற்றி விட முடியும்.
எனவே நீங்களும் ஒருமுறை இதை முயற்சி செய்து பாருங்கள். மிக நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். அப்படி கிடைத்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.