வருடத்தில் மூன்று மாதங்கள் கோடைகாலம். இந்த காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அது மட்டும் இல்லாமல் நமது வீட்டில் இருக்கக்கூடிய செடி கொடிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க முடியாமல் போகும்.
குறிப்பாக தென்னை மரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் மரம் வாடி காய்கள் குறைவாக கிடைக்கும். எனவே கோடையிலும் தென்னை மரத்திலிருந்து அதிக அளவு காய்களை பெறுவதற்கு நீங்கள் உங்கள் சமையல் அறை கழிவு நீரை அப்படியே உங்கள் தென்னை மரங்களுக்கு கொடுப்பதன் மூலம் அதிக அளவு காய்களை பெற முடியும்.
அதுமட்டுமல்லாமல் உரித்த மட்டைகளை தென்னை மரத்தின் வேர்களை சுற்றி புதைத்து விடுங்கள். பிறகு இதில் நீர் ஊற்றும் போது இந்த மட்டைகளில் நீரை உறுஞ்சி இருக்கும். இதன் மூலம் அதிக அளவு நீர் ஆவியாவது தடுக்கப்பட்ட மரத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
ஒரு வீட்டில் ஒரு மனிதன் குளிப்பதற்கும் துணிகள் சுவைப்பதற்கும் பாத்திரத்தை தேய்ப்பதற்கும் 20 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை செலவு செய்கிறார்கள். எனவே ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் கழிவு நீரே நமது தென்னை மரங்களுக்கு மற்ற செடிகளுக்கு போதுமானது.
எனவே மறந்துவிடாமல் நீங்கள் உங்கள் வீட்டில் சமையல் அறை கழிவு நீரை உங்கள் தென்னை மரங்களுக்கு கொடுப்பதால் வேண்டிய அளவு காய்களை இந்த கோடையிலும் நீங்கள் பெற முடியும் என்பதை உணர்ந்து செயல்படவும்.
மேற்கூறிய எந்த வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் தென்னை மரத்திற்கு தேவையான தண்ணீரை கொடுப்பதோடு கோடையில் உங்கள் வீட்டில் தோட்டத்தில் இருக்கும் செடிகள் அனைத்தையும் நீ பற்றாக்குறையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எனவே நீங்களும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு பலன் கிடைக்கும் அப்படி பலன் கிடைத்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.