“கவர்ச்சியான கண்கள் வேண்டுமா..!” – இப்படி செய்யுங்க..!

கண்ணழகு என்றால் நடிகை மீனாவை அதற்கு உதாரணமாக கூறலாம். அகண்ட விழிகளை காட்டி அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கக்கூடிய அவரைப் போலவே உங்கள் கண்களும் கவர்ச்சியாக மாற வேண்டுமெனில் இதுபோன்ற டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே போதும் நீங்களும் கவர்ச்சியான கண்களை எளிதில் பெற முடியும்.

இதற்காக நீங்கள் கண்மை, மஸ்காரா, ஐ லைனர், ஐ ஷேடோ இவற்றையெல்லாம் பயன்படுத்தி வந்தாலும்  கண்களில் ஒரு கவர்ச்சியோ, உயிர்ப்போ இல்லை என்று நினைப்பவர்கள் கட்டாயம் இதை பாலோ செய்யுங்கள்.

கவர்ச்சியான கண்களைத் பெற உதவும் டிப்ஸ்

பொதுவாக கண்களில் அழகு மிளிர வேண்டும் என்றால் நீங்கள் சோர்வு இல்லாமல் ஆழ்ந்து தூங்குவது அவசியம் என்று அழகு கலை நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போதுதான் உங்களுக்கு கவர்ச்சியான கண்கள் கிடைக்குமாம்.

மேலும் இன்று இருக்கும் நவீன யுகத்தில் கம்ப்யூட்டர் முதல் செல்போன் வரை நீங்கள் ஒளி திரைகளோடு பல மணி நேரங்கள் செலவிடுகிறீர்கள். இதன் மூலமாக உங்கள் கண்கள் கலை இழந்து ஆரோக்கிய ரீதியாகவும் பாதிப்படைவதால் உங்கள் கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அதற்கு உரிய உணவுகளை எடுத்துக் கொள்வதோடு தேவையில்லாத சமயங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் உள்ளங்கைகளை தேய்த்து சூடேற்றி கண்கள் மீது ஒற்றி எடுங்கள் இது உங்கள் பார்வை திறனை அதிகரிக்கும். குறைந்தது அரை மணி நேரம் ஆவது ஒரு நாளுக்கு உங்களது கண்களுக்கு ஓய்வினை கொடுங்கள்.

இரவு நேரத்தில் ஆவது உங்கள் கண்களை அழகுப்படுத்தும் சாதனங்களை பயன்படுத்தாமல் விட்டு விடுங்கள்.

கண்களுக்கு உரிய மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் உங்கள் கண்களை கழுவி விளக்கெண்ணையை ஒரு டீஸ்பூன் அளவு கையில் ஊற்றி கண்களை சுற்றி தேய்த்து மெதுவாக மசாஜ் செய்வதை வாரத்துக்கு ஒரு முறையாவது செய்யுங்கள்.

தக்காளியை லேசாக வெட்டி அதை நன்றாக உங்கள் கண்களில் அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு மசாஜ் செய்வதோடு ஐஸ் கட்டியை கொண்டு லேசாக ஒத்தடம் கொடுப்பதன் மூலம் கண்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி பளிச்சென்று கண்கள் மின்னும்.

இரவு நேரங்களில் அரை மணி நேரமாவது வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் கண்களின் மேல் வைத்து உங்கள் கண்களுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கலாம். மேற்கூறிய டிப்சை பயன்படுத்தி நீங்களும் உங்கள் கண்ணழகை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam