பாடகி ஸ்ரேயா கோஷல் மிகச்சிறந்த ஒரு பின்னணி பாடகி. பலமுறை, பல இடங்களில் அவரது குரலில் ஒலித்த பாடல்களை நீங்கள் கேட்டு ரசித்திருக்கிறீர்கள்.
ஆனால், பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், சினிமா இசை ரசிகர்களுக்கு பி. சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா போல, இவரும் தவிர்க்க முடியாத மிகச்சிறந்த பாடகிகளில் முக்கியமான ஒருவர்.
இளம் காற்று வீசுதே – பிதாமகன்,
குண்டு மல்லி குண்டு மல்லி –சொல்ல மறந்த கதை,
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு – சண்டக்கோழி,
உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமி்ல்ல– விருமாண்டி,
நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்– 7 ஜி ரெயின்போ காலனி,
பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு – வசூல்ராஜா எம்பிபிஎஸ்,
அண்டங்காக்கா கொண்டைககாரி –அந்நியன்
சாமிகிட்ட சொல்லிபுட்டேன் – தாஸ்
மைலாஞ்சி, மைலாஞ்சி – நம்ம வீட்டுப்பிள்ளை
சாரக்காற்றே – அண்ணாத்த
ராட்சச மாமனே – பொன்னியின் செல்வன்
இந்த பிரபலமான பாடல்கள் அடிக்கடி உங்கள் காதுகளில் ஒலித்திருக்கும். ஆனால், இந்த பாடலில் ஒலிககும் பெண் குரலுக்கு சொந்தக்காரர் என்று பலருக்கும் தெரிந்திருக்காது, அவர் ஸ்ரேயா கோஷல்.
இந்திய மொழிகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,.கன்னடம், உருது என, 19 மொழிகளில் பாடக்கூடிய மிகச்சிறந்த பாடகி. இதுவரை, 2,300 பாடல்களை பாடி இருக்கிறார். இதில், இந்தியில் மட்டுமே 900 பாடல்களை பாடி இருக்கிறார்.
சிறந்த பாடகிக்காக, நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.. பின்னணி பாடகி மட்டுமல்லாது, பாடல் ஆசிரியராகவும் உள்ளார். பாடல்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார். நான்குமுறை கேரள அரசு விருது, இரண்டு முறை தமிழக அரசின் விருது, மற்றும் பலமுறை பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கிறார்.
இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஸ்ரேயா கோஷல் அவ்வப்போது, தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை பார்த்தால், சினிமா நடிகையை விட மிக அழகாக இருக்கிறார்.
இவர் பாடகியாக மட்டுமின்றி, நடிகையாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தால், தமிழிலோ அல்லது மற்ற மொழி ஏதேனும் ஒன்றிலோ மிக முக்கியமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்திருப்பார் என, நெட்டிசன்கள் கமெண்ட், லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர்.