உடல் எடை குறைக்க தினமும் செய்ய வேண்டியவை..! – 100% ரிசல்ட் கிடைக்கும்..!

உடல் எடை குறைக்க : இன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றார்கள். இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் எடை குறைக்க முடியாமல் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறை  மாற்றிக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கான வழிகள் என்ன என்று பார்ப்போம் வாங்க.

உடல் எடை குறைக்கும் வழிமுறைகள்:

1. கீழே உட்கார்ந்து பாத்திரம் கழுவுவது நேரம் கிடைக்கும் போது மட்டுமாவது செய்யலாம். அப்படி கழுவ வசதி இல்லை என்பவர்கள் பின்பற்ற முடியாது.

2. துணிகளை கைகளால் அடித்து துவைத்தால் கை சதை குறையும். மன அழுத்தமும் குறையும்.

3. கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது காய் நறுக்குவது துணி மடிப்பது.

4. பக்கத்து கடைக்கு நடந்து சென்று தேவையானது வாங்குவது.

5. தரையில் பாயில் படுத்து தூங்கும் போது கை கால்களை நீட்டி மடக்கி தூங்கலாம். அது கை காலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

6.  காலையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு காலாற நடப்பது.

7. கையால் வெண்ணெய் கடைந்து எடுப்பது நல்ல பயிற்சி.

8. ஒரு நாள் மௌன உண்ணாவிரதம் இருப்பது உங்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் மனம் ஒரு நிலப்படும் உடற்பயிற்சியை தடையில்லாமல் செய்ய உதவும்.

அப்படியான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல் மூலம் உடல் நலத்தை பேண முடியும். உடல் ஆரோக்கியமும் மேம்படும் மட்டும் இல்லாமல் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam