கற்றாழையின் ஜெல் எண்ணற்ற பயன்களை சரும ஆரோக்கியத்திற்காக அள்ளித் தருகிறது. அதனைப் பற்றி விரிவாக அனைவருக்குமே நன்றாக தெரியும். மிகச்சிறந்த மூலிகையான இது நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதைப் போலவே இதன் பூவும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
இந்த கட்டுரையில் நீங்கள் கற்றாழை பூவின் நன்மைகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம். பொதுவாக இந்த கற்றாழை பூ செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூப்பூக்கும் காலமாக இருக்கும். இந்த காலத்தில் இதனை நீங்கள் பறித்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
கற்றாழை பூவின் நன்மைகள்
கற்றாழையில் பூக்கும் பூக்கள் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கற்றாழை பூ உடலுக்கு குளிர்ச்சியில் தரக்கூடிய ஆற்றல் கொண்டது. அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வெள்ளைப்படுதல், நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்கிறது.
கற்றாழை பூ கிடைக்கும் சமயத்தில் அதை எடுத்து உலர வைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை சிறிதளவு நீர் அல்லது மோரில் கலந்து குடிப்பதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாகவும் வெள்ளைப்படுதல் நோய் ஏற்படாமலும் இருக்கும்.
அதுபோலவே எந்த கற்றாழை பூவில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்கிறது. மேலும் உடலில் ஏற்படும் சோர்வை தடுத்து உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.
காற்றில் உள்ள நச்சுக்களை விரட்டியடிக்க கூடிய தன்மை கற்றாழை பூவுக்கு உள்ளது. இதனால் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மை சுத்தப்படுத்தப்படும். மேலும் காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுக்களையும் இது கட்டுப்படுத்தும்.
வயிற்றில் ஏற்படுகின்ற புண்ணிற்கு இந்த கற்றாழை பூ மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. இதை ஒரு ஆன்ட்டி இன்ஃப்லமேட்டரி தன்மை கொண்டது.இது வயிற்றில் ஏற்படும் அல்சரை குறைக்க கூடிய ஆற்றல் உள்ளது. மேலும் கர்ப்பப்பையில் உருவாகும் புண்களை தீர்க்கக்கூடிய சக்தி கொண்டது.
தலைமுடியில் உண்டாகும் பொடுகு, பேன் போன்றவற்றை அடியோடு அழிக்க இந்த கற்றாழை பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தாலே போதுமானது.
முகத்துக்கு பளபளப்பை தரக்கூடிய அருமையான பணியை இந்த கற்றாழை பூ செய்வதால் கற்றாழை பூவை அரைத்து உங்கள் முகத்தில் தேய்த்துவர முகச்சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று காட்சி அளிக்கும்.
உங்கள் கேசம் பட்டு போல் இருக்க இந்த கற்றாழை பூவோடு வெந்தயத்தை சேர்த்து அரைத்து தலையில் ஹேர்பேக்காக பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான கண்டிஷனராக உங்கள் உங்கள் கூந்தலுக்கு உதவி செய்யும் இதன் மூலம் கூந்தல் பட்டு போல மின்னும்.