“ஜஸ்ட் 2 மினிட்ஸ் வாக்..!” – உங்க ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த..!

இன்று 30 வயதை தாண்டி விட்டாலே அனைவருக்கும் சர்க்கரை நோயின் பாதிப்புகள் அதிகளவு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பாரம்பரியம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடு மற்றும் அவரது அதிக உடல் எடை போன்றவற்றை நாம் கூறலாம்.

இப்படி இருப்பவர்களுக்கு மிக எளிதில் சர்க்கரை நோய் ஏற்பட்டுவிடும். சர்க்கரையை நோய் வந்து விட்டாலே அதனை அடுத்து பல நோய்களின் தாக்குதல்களுக்கு விரைவில் ஆளாக கூடிய சூழ்நிலைகள் உள்ளது.

எனவே இவர்கள் உணவு முறையை முற்றிலும் மாற்றி, அதற்குரிய மருந்துகளை எடுத்து வந்தாலும் சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாமல் அப்படியே இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் தினமும் இரண்டு நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். அதனைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ரத்தத்தில் சர்க்கரையை குறைக்க உதவும் நடை பயிற்சி

நீங்கள் சாப்பிட்ட பிறகு குறைந்தது இரண்டு நிமிடங்களாவது நடைப்பயிற்சியில் ஈடுபடுவதின் மூலம் உங்கள் செரிமானம் சீராவதோடு இரத்த சர்க்கரை அளவு குறைவதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இதற்கு காரணம் என்ன என்று கேட்கும் போது நடைப்பயிற்சியின் போது உங்கள் தசைகளில் ஏற்படக்கூடிய சுறுசுறுப்பான செயல்பாடானது அதிக அளவு குளுக்கோஸை உறுஞ்சிவிடும். எனவே ரத்த ஓட்டம் சிறப்பாக அமைவதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் குறைகிறது.

எனவே நீங்கள் உணவு அருந்திய பிறகு 60 முதல் 90 நிமிடங்களுக்குள் நடை பயிற்சியை மேற்கொள்ளும்போது இந்த பலன் கூடுதலாக அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைப்பதாக மருந்தியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும்  நடைப்பயிற்சியின் மூலம் மன அழுத்தம், மன சோர்வு, பதட்டம் போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. இதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய கார்டிசோல் மற்றும் அட்ரீனல் சுரப்பு குறைகிறது.

நீங்கள் நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இரவு நேரத்தில் சேரோட்டீன் என்ற ஹார்மோன் வெளியிடப்பட்டு உங்கள் உறக்கத்தை அதிகப்படுத்துகிறது.

எனவே ரத்த அழுத்தம் குறைய உதவி செய்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பக்கவாதம் வராமல் தடை செய்ய உதவுகிறது.

தினமும் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்வதின் மூலம் வாயுத்தொல்லை, வயிற்று எரிச்சல் போன்ற உபாதைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

 எனவே கட்டாயம் நீங்கள் உணவு அருந்திய பிறகு சர்க்கரை அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் கட்டாய நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam