“நன்றாக தூங்கி பல நாள் ஆகிவிட்டதா..!” – நிம்மதியாய் தூங்க சத்குரு தரும் டிப்ஸ்..!

பல நாட்கள் ஆகியும் எனக்கு நன்றாக தூக்கமே வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் ஈசாவை நிறுவிய சத்குரு கூறும் வழிகளை பின்பற்றுவதின் மூலம் உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.

 அதற்காக அவர் எப்படி தூங்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். அதனைப் பற்றி விரிவாக எந்த பதிவில் படிக்கத் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் என்பது கிடைப்பது அரிதாகி விட்டது. கடுமையான உழைப்பு, தேவைகளுக்கான ஏக்கங்கள், தூக்கத்தை பாதிக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு கூட ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே நமது சத்குரு கூறியிருக்கின்ற வழிகளை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உறக்கத்தை சீரான முறையில் உறங்குவதின் மூலம் பலவிதமான பக்க விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சீரான நிம்மதியான தூக்கம் ஏற்பட சத்குரு கூறும் வழிகள்

உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு நீங்கள் திரவப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் டீ, காபி, புகை பிடித்தல், மது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

உறங்குவதற்கு முன்பு பரபரப்பான மனநிலையை தவிர்க்க ஆழ்ந்த தியானத்தை செய்து பிறகு உறங்கச் சொல்லுங்கள். சாப்பிட உடனே உறங்கச் செல்வது தவறானது குறைந்தபட்சம் 3 மணி நேரம் கழித்து ஆவது நீங்கள் உறங்க வேண்டும்.

தூக்கம் வந்த பிறகு நீங்கள் படுத்து உறங்கலாம்.மேலும் பகலில் தூங்குவதை தவிர்த்து விடுங்கள். தூக்கம் இன்மை ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இதயம் பலவீனம் ஆவதோடு ரத்த ஓட்டம், நாளமில்லா சுரப்பிகளின் வேலைகளில் பாதிப்பு ஏற்படும்.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாவது நீங்கள் உறங்க வேண்டும். இதை நீங்கள் வழக்கப்படுத்திக் கொண்டால் உங்களுக்கு எந்த விதமான ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படாது.

எனவே சத்குரு கூறிய இந்த குறிப்புகளை உங்கள் மனதில் கொண்டு எத்தகைய பணி இருந்தாலும் இரவு நேரத்தில் குறித்த நேரம் நீங்கள் உறங்குவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam