டிவி சீரியல் நடிகை ஆயிஷா, கேரளாவைச் சேர்ந்தவர். காசர்காடில், பள்ளி படிப்பை முடித்த பின், சென்னையில், கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின், விஜய் டிவியில் பொன்மகள் வந்த என்ற சீரியலில் ஆயிஷா அறிமுகமானார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மாடலிங் துறையிலும் இருக்கிறார். சன் டிவியில் மாயா தொடரிலும், ஜி தமிழ் டிவியில் சத்யா சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அடுத்து, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிக பிரபலமடைந்தார்.
கடந்த பிக்பாஸ் சீசனை பொருத்த வரை, டைட்டில் வின்னர் அசீமுடன் அடிக்கடி சண்டையிட்டு அதிக பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களில் ஆயிஷாவும் ஒருவர். இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக்கொண்டு, சண்டைக்கோழிகள் போல் இருவரும் மோதிக்கொள்ள தயாரானதும், சக போட்டியாளர்கள் இவர்களை தடுத்து, சமாதானப்படுத்தியும் பிக்பாஸ் ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடைசியில் ஆவேச சண்டையிட்ட கொள்ளும் இருவரும் சமாதானமாகி சகஜமாகி பழகுவதும் வழக்கமானதால் ரசிகர்கள் ஏமாந்து போயினர்.
ஆயிஷா பட வாய்ப்புகளுக்காக, அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பதிவிட்ட கிராமத்து பெண்ணாக புடவை கட்டி, தலையில் கனகாம்பரம் பூ வைத்து வெட்கப்படும் ஆயிஷா புகைப்படங்கள் டிரண்டிங் ஆகி வருகிறது.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில், முண்டா பனியனும், பளீரென பளிச்சிடும் தொடைகளும் தெரிய வலம் வந்தவர்தான் இந்த ஆயிஷா. இப்போது, திடீரென கிராமத்து பெண் தோற்றத்தில், வித்யாசமான இந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
ஆனால்,மாடலிங் ஆடையில் மட்டுமல்ல, கிராமிய பெண் தோற்றத்திலும் அம்மணி அழகாகவே தெரிகிறார்.
விளம்பர படங்களிலும், சீரியல்களிலும் நிறைய நடித்த ஆயிஷாவுக்கு இன்னும் சினிமா வாய்ப்புகள் கதவை தட்டவில்லை. விரைவில் தட்டினால், அவரும் சில படங்களில் கதாநாயகியாக திறமை காட்டுவார். காலம் வழிவிட்டால், ஆயிஷாவும் பெரிய திரையில் தோன்றலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை துவக்கத்தில் படு சுறுசுறுப்பாக காணப்பட்ட ஆயிஷா, நாளடைவில் தனது வேகத்தை குறைத்துக்கொண்டார். அதன்பின் பத்தோடு பதினொன்றாக தன்னை மாற்றிக்கொண்டார். ஆனால், பிக்பா்ஸ் புகழ் வெளிச்சம் எல்லாம், அந்த நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருக்கும் வரைதான். வெளியே வந்துவிட்டால், அதன்பின் அவர்களும் மிக மிக சாதாரண மனிதர்களாகவே, வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.