“மரண பயம் நீங்க செல்ல வேண்டிய கோயில் திருநீலங்குடி..! – விவரத்தை படிப்போமா?

மரண கண்டம் இருப்பவர்களுக்கு கட்டாயம் எம பயம், மரண பயம் ஏற்படும். இதனை உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் எளிதில் கணித்து விடலாம். அப்படி ஜாதகத்தில் மரண கண்டம் இருப்பவர்கள் கட்டாயம் திருநீலங்குடி சென்று அங்கு இருக்கும் கடவுளை வழிபட்டு வருவதன் மூலம் உங்களுக்கு அந்த பயம் விரைவில் நீங்கிவிடும்.

இந்த கோவில் கும்பகோணம் காரைக்கால் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருநீலங்குடி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் திருநீலகண்டநாதர் மற்றும் ஒப்பிலாமுலையாளை நீங்கள் தரிசித்து வந்தாலே உங்களுக்கு மரண பயம் நீங்கிவிடும்.

மேலும் மூலவராக இருக்கும் திருநீலகண்ட நாதருக்கு செய்கின்ற தைல அபிஷேகம் விசேஷகரமானது. எவ்வளவு தைலத்தைக் கொண்டு இவருக்கு அபிஷேகம் செய்தாலும் அந்த அபிஷேகப் பொருள் வெளியே செல்லாமல் உள்ளே அப்படியே தங்கி விடுவது அதிசயமாக இன்று வரை உள்ளது.

இந்தக் கோயிலில் ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல நிறத்தில் இருக்கும் ஆடை, வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை தானமாக செய்வார்கள்.

அது மட்டுமல்லாமல் எம பயம், மரண பயம் நீங்க இந்த தலத்தில் வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் எருமை, நீல நிற துணி, எள் போன்றவற்றை தானமாக கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வதின் மூலம் உங்களுக்கு அந்த பயப்பாடு விலகிவிடும் என்பது இன்றுவரை நிலையாக இருக்கும் ஒரு ஐதீகம் என்று கூறலாம்.

எனவே இது போல ஜாதக பிரச்சனை இருப்பவர்கள், இந்தக் கோயிலுக்கு சென்று உரிய பரிகாரத்தை செய்வதின் மூலம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும். அந்த பயம் விலகி விடும்.

எனவே எம பயத்தால் கஷ்டப்படுபவர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்கள், உடனே நீங்கள் இந்த திருநீலகண்ட நாதரை தரிசித்து அங்கு செய்கின்ற பரிகாரங்களை செய்து நீங்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam