“தூங்கும் போது குறட்டை வந்தா..!” – அத தவிர்க்க இந்த உணவ சாப்பிடுங்க..!

பொதுவாக குறட்டை போடும் நபர்களின் பக்கத்தில் படுத்து தூங்கும் போது, நமது தூக்கத்தை அது கெடுத்து விடும். மேலும் எப்படி சொல்வது என்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் நீங்கள் தவிப்பீர்கள்.

 இதனால் உங்களுக்கு மட்டுமல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் படுத்து உறங்குபவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

எனவே உங்கள் குறட்டை சத்தத்தை குறைக்கவும், குறட்டை ஏற்படுத்தாமல் இருக்கவும் சில உணவுப் பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

எனவே குறட்டை தொல்லையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய உணவுகளை பயன்படுத்துவதன் மூலம் குரட்டை தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

குறட்டையை தடுக்கும் உணவுகள்

பொதுவாகவே தேனுக்கு தொற்றுக்களை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடிய பண்புகள் கொண்ட இந்த தேன் உங்கள் நாசியின் பாதையில் ஏற்பட்டிருக்க கூடிய அடைப்புக்களை சரி செய்து காற்று உள்ளே தங்கு தடை இல்லாமல் சென்று வர வழி செய்கிறது. இதனால் உங்கள் குறட்டை சத்தம் குறையும்.

பெப்பர்மென்ட் என்று கூறக்கூடிய மிளகு கீரையில் மருத்துவ பண்புகள் அதிகளவு உள்ளது. இது உங்கள் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருக்கின்ற வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் இதனை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு குறட்டை ஏற்படாது. மேலும் உறங்கச் செய்வதற்கு முன்பு நீங்கள் பெப்பர்மென்ட் டீ குடிப்பதின் மூலம் குறட்டை விடாமல் இருக்கலாம்.

பொதுவாக உங்கள் மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் திசுக்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும் பட்சத்தில் குறட்டை பிரச்சனை ஏற்படும். இடைத் தடுக்க நீங்கள் பாலில் மஞ்சள் போல் சேர்த்து மஞ்சள் பாலை குடித்து வந்தாலே போதுமானது.

அதிகமாக குறட்டை போடும் நபர்கள் மீனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மீனில் இருக்கும் ஒமேகா 3 மற்ற கொழுப்பு அமிலம் ஆனது  மூக்கின் பாதையில் இருக்கும் அடைப்பை சரி செய்து சளியை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் உள்ள அடைப்பை சரி செய்ய இந்த வெங்காயச் சாறு மிகச் சரியான தீர்வாக இருப்பதால் இதை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு குறட்டை ஏற்படாது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam