“கோயில் புளியோதரை சாப்பிட..!” – சூப்பர் டேஸ்டில் வீட்டிலேயே இப்படி செய்யலாம்..!!

எப்படித்தான் நமது வீட்டில் புளியோதரை செய்தாலும் அது கோயிலில் வாங்கி சாப்பிடக்கூடிய புளியோதரையின் டேஸ்டில் இருக்காது. பார்த்துப் பார்த்து பக்குவமாக செய்தும் கோயில் டேஸ்டில் புளியோதரை செய்ய முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள், இனி அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முறையில் நீங்கள் உங்கள் வீட்டில் புளியோதரை செய்தால் அது கோவில் புளியோதரை சுவையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அதைவிட டேஸ்டாக உள்ளது என்று அனைவரும் கூறும் வகையில் இருக்கும். அதனை செய்ய நீங்கள் இதை ஃபாலோ செய்தாலே போதும்.

கோவில் டேஸ்ட்டில் புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்

1.கடலைப்பருப்பு ஒரு கப் 2.உளுத்தம் பருப்பு கால் கப்

3.தனியா விதைகள் ஒரு டேபிள் ஸ்பூன்

4.மிளகு ஒரு டீஸ்பூன்

5.சீரகம் ஒரு டீஸ்பூன்

6.வெந்தயம் அரை டீஸ்பூன்

7.கருவேப்பிலை ஒரு கைப்பிடி

8.வெள்ளை எள்ளு ஒரு டேபிள் ஸ்பூன்

9.வரமிளகாய் 10

10.புளி

11.பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்

12.உப்பு தேவையான அளவு

13.நிலக்கடலை 100 கிராம்

14.அரிசி அரை கிலோ

15.நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் புளியோதரை பொடி செய்யத் தேவையான பொருட்களான கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா விதைகள், மிளகு, சீரகம், வெந்தயம், எள்ளு, வரமிளகாய் போன்றவற்றை ஒரு வாணலியில் எடுத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வறுக்கும்போது கருகிவிடாமல் வறுப்பது  மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

வறுத்த இந்த கலவையை நீங்கள் சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து ஒரு தட்டத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு குக்கரில் அரை கிலோ அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீரை விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் எடுத்து வைத்திருக்கும் புளியை சுடுநீரில் போட்டு ஊற வைத்து நன்கு கரைத்து புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை போட்டு தாளித்து கருவேப்பிலையை போட்டவுடன் நீங்கள் குக்கரில் வைத்திருக்கும் சாதத்தை போட்டு கிளறி அதனோடு எடுத்து வைத்திருக்கும் வேர்க்கடலை புளித்தண்ணீர் போன்றவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.

 மேலும் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் புளியோதரை பொடியை போட்டு நன்கு கிளற வேண்டும்.பிறகு மீண்டும் ஒரு டீஸ்பூன் அளவு நல்லெண்ணையை ஊற்றி கிளறுங்கள்.

 இப்போது சுவையான கோவில் புளியோதரை தயார். இந்த புளியோதரைக்கு நீங்கள் வெள்ளை எல்லை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …