“நினைத்தது நிறைவேற குரு மந்திரம் போதும்..!” – நீங்களும் உச்சரித்துப் பாருங்க..!

குரு பார்க்க கோடி நன்மை குருவருள் இருந்தால் அனைத்தையும் வெல்ல முடியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அது முற்றிலும் உண்மைதான் எத்தகைய தோஷங்கள், நம்மை ஆட்டி படைத்தாலும் குரு பகவானின் அசாத்திய பார்வையில் நீங்கள் இருக்கும்போது அவற்றால் எதுவும் செய்ய முடியாது.

நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய இந்த குருபகவானை தட்சிணாமூர்த்தி என்று சிலர் அழைக்கிறார்கள்.இது தவறு குரு பகவான் வடக்கு பார்த்து அமர்ந்து இருப்பவர். ஆனால் தட்சிணாமூர்த்தி தெற்குப்பார்த்து அமர்ந்த நிலையில் இருப்பார். இதுதான் குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.

ஞானத்தை கொடுக்கக்கூடிய குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்துவதின் மூலம் உங்களுக்குப் பிடித்திருக்கும் தோஷங்கள் எல்லாவற்றையும் நீங்கி குரு பார்வை கிடைக்கும்.

குரு பார்வை கிடைத்துவிட்டாலே உங்களுக்கு குரு யோகம் அடிக்கும் என்றுதான் கூறுகிறார்கள். இதனை ஜாதகத்தில் குருவின் ராசி இருந்தால் திருமண யோகம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான யோகங்களும் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.

 பக்தர்கள் தன்னை நாடி வரும்போது அனைத்து விதமான பலன்களையும் கொடுக்கக்கூடிய அளப்பரிய ஆற்றல் படைத்த தெய்வமாக இந்த குரு பகவான் விளங்குகிறார்.

இந்த குரு பகவான்,வேறு யாரும் இல்லை. தேவ குருவான பிரகஸ்பதி தான். சிவபெருமானின் பூரண அருளை பெற்று கிரகங்களில் ஒருவராக தனக்கு உரிய இடத்தை பிடித்துக் கொண்டதின் காரணத்தால் தான் அவரை குருபகவான் என்று அழைக்கிறோம்.

தகதகவென்று தங்கம் போல உடல் அமைப்பைக் கொண்டிருக்கும் குரு பகவானுக்கு பொன்னான் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்கள் மட்டுமல்லாமல் கல்விச்செல்வம், அறிவு அதிகமாக குரு பகவானை வணங்கினால் போதுமானது.

குரு பகவானின் மூலமந்திரம்

ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரெளம் ஸஹ் குரவே நமஹ

இந்த குரு மந்திரத்தை தொடர்ந்து நீங்கள் உச்சரித்து வருவதின் மூலம் கட்டாயம் உங்களுக்கு மிகச்சிறந்த நன்மைகள் ஏற்படும்.

நீங்களும் குறிப்பாக வியாழக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள் உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள் மேலும் குரு பகவானின் பரிபூரண அருளை பெற்று அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam