இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2023 சனிக்கிழமை.நாம் நினைப்பது நடப்பதோடு மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தும் நம்மை தடுமாற வைக்கும்.இதற்கெல்லாம் காரணம் என்ன என்று எண்ணுவதற்குள் விதி விளையாடிவிட்டது என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எளிதாக சமாளிக்கவும், ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் நமது ஜாதகம் நமக்கு உதவி செய்கிறது.

ஜோதிடர்கள் மூலம் கணிக்கப்படும் இந்த ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உணர்ந்து கொண்டு அதற்கு தக்க பரிகாரங்களை செய்வதின் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இடர்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு வளர்ச்சிகரமான நாளாக உள்ளது. பயனுள்ள விஷயங்களுக்காக நீங்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் இனிமையான வார்த்தை பிறரை கவரும் விதத்தில் இருப்பதால் இந்த நாள் நீங்கள் எதையும் செய்து முடிக்கலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி இடத்தில் உங்கள் திறமைகள் அழகாக வெளிப்படும். இதனால் உங்களுக்கு நல்ல மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். தொழிலை சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று உங்களுக்கு நிறைய பணம் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. முக்கிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் முற்படுவீர்கள். எனவே ஆரோக்கியமான நாளாக இந்த நாள் நிதியை பொறுத்தவரை அமைந்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு சிறப்பான நாள் எந்தவிதமான குறைபாடும் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படாது எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனத்தோடு இருங்கள். உங்கள் அணுகுமுறையில் எச்சரிக்கை தேவை. மேலும் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. எதிர்பாராத சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருப்பதால் மிகவும் கவனத்தோடு இருக்கவும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் சவால்களை சந்திக்க வேண்டும். பணியில் வெற்றி பெற உங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். எந்த சூழ்நிலையிலும் பதட்டத்தை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆற்றல் என்று குறைந்து இருக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சுமாரான பயனே இன்று கிடைக்கும். வரவும், செலவும் சமமாக இருப்பதால் நீங்கள் யோசித்து பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று முடிந்தவரை மற்றவர்களை அனுசரித்து அமைதியாக செல்ல வேண்டும். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பற்றி தைரியமாக கூறி அதை கையாளுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். லேசான தலைவலி கட்டாயம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமைய வேண்டும், என்றால் பொறுமையும், அமைதியும், அதிகளவு தேவை.பதட்டப்படாமல் சகஜமாக எதையும் எதிர்கொள்ளுங்கள். கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியிடத்தில் நீங்கள் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். என்றாலும் திட்டமிட்டு பணியாற்றுவதின் மூலம் அதிக அளவு நன்மைகளை உங்களால் பெற முடியும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இதன் காரணமாக பண பற்றாக்குறை அதிகரிக்கும். எதிர்காலத்துக்கு என சேமிக்கும் பழக்கம் இருந்தால் அது இன்று கட்டாயம் நடக்கும். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடையக் கூடாது. அப்படி பதட்டம் அடைவதால் உங்கள் ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கப்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

கடக ராசி நண்பர்களில் இன்று உங்களுக்கு தகவல் பரிமாற்று திறமை மேம்படுவதின் மூலம் நினைத்த காரியங்கள் விரைவாக நடக்கும். பொறுமையாக எதையும் கையாலலாம். உங்கள் செயல்களில் தாமதங்களை சந்திக்க நீங்கள் தயாராக இருங்கள். அப்படி தாமதங்களை நீங்கள் சந்திக்கக் கூடாது என்றால் திட்டமிடுவது மிகவும் அவசியமானது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் பணிகளை இன்று கூடுதலாக பார்க்க வேண்டி இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் கவனத்தோடு பணியாற்றவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் சம்பாத்தியம் குறைந்த அளவு காணப்பட்டாலும் அந்த சம்பாத்தியத்தை நீங்கள் சேமிப்பீர்கள். சேமித்த பணம் உங்களுக்கு பற்றாக்குறையாக இருக்கும் சமயத்தில் நல்ல பலனை கொடுக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதை நீங்கள் தவிர்த்து விடுங்கள்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்று அனுகூலமான நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது. உங்கள் செயல்களில் முன்னேற்றம் காணப்படும். சுய முயற்சிகள் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் இன்று கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை என்று பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உங்களது கடின உழைப்பு வெளிச்சத்திற்கு வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குறைந்த நேரத்தில் அதிகமான பணிகளை நீங்கள் முடித்து தருவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் உங்கள் வங்கிக் கையிருப்பு அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் மனம் செல்லும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான சீர்கேடும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல. எனவே பொறுமையோடு எதையும் செய்ய வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமென்றால் கட்டாயம் அதற்காக காத்திருங்கள்.

 தொழில்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளை உங்களால் சரிவர கவனிக்க முடியாது. தரமான பணிகளை நீங்கள் செய்ய முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பணிக்கான பாராட்டுக்கள் கிடைக்காவிட்டாலும் பணியில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வரவும், செலவும் கலந்து காணப்படும். இந்த நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஜாக்கிரதையாக பணத்தை கையாளவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்த்து விடுங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நீங்கள் ஆன்மீக ஈடுபாட்டோடு இருப்பீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம் .சில நாட்கள் தள்ளிப் போடுங்கள். தகவல் பரிமாற்றத்திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வது மிகவும் நல்லது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பணிகளை தரமாக முடித்து குறித்த நேரத்தில் கொடுக்கக்கூடிய நிலை இன்று உங்களுக்கு உள்ளது. எனவே இந்த நாளை திட்டமிட்டு செயல்படுவதின் மூலம்  உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட முடியும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உங்கள் பணத்தை ஜாக்கிரதையாக பாதுகாக்க முடியும்.மேலும் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் முதுகு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டாம். எப்போதும் போல உங்கள் மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் கவன சிதறல் ஏற்படாமல் உங்கள் பணியை கவனத்தோடு செய்யவும். இதன் மூலம் உங்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் வரவும், போகவும் சரியாக இருக்கும். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். சிக்கனத்தை அவசியம் கடைபிடிக்கவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை ஆரோக்கியம் இல்லாத உணவு பண்டங்களை உண்ண வேண்டாம். எண்ணெய் மற்றும் காரம் சார்ந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடல்நிலை பாதிப்படையும்.மேலும் உங்கள் முகத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் அடிக்கடி நீரால் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருப்பதால் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். உங்கள் உறுதியும், தைரியமும் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்கள் பணியை பார்த்து மேலதிகாரிகள் வியப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் செய்வார்கள். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இன்று உங்களது பணத்தை சுதந்திரமாக நீங்கள் செலவு செய்வீர்கள். மேலும் சிக்கனமாக பணத்தை சேமிப்பது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் விருப்பப்படி அனைத்துமே நடக்கும் மகிழ்ச்சிகரமான நாளாக இருந்த நாள் அமைந்திருப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதில் பிரதிபலிக்கும் எனவே அச்சம் வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமைந்துள்ளது. இன்றைய நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதின் மூலம் நல்ல நல்ல பலன்களை அடைய முடியும்.மேலும் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதன் மூலம் உங்களுக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை மிக தைரியமாக சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதன் மூலம் உங்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். எனவே தொழில் ஸ்தானத்தைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை நம்ப முடியாத இடங்களில் இருந்தெல்லாம் உங்களுக்கு பணவரவு வந்து சேரும். எனவே உங்கள் சொத்துக்கள் அதிகரிக்க கூடிய நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் மேலும் சொத்துக்களை வாங்கக்கூடிய நிலையும் உருவாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் சிறப்பான நாள் என்று கூறலாம். திடமாக நீங்கள் இருப்பதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்றைய நாள் அமைதியாக பிரார்த்தனைகளையும், தியானத்தையும் மேற்கொள்ள வேண்டிய நாளாக உள்ளது. உங்களுக்கு ஏற்படும் சூழ்நிலைகளை மாற்ற இந்த தியானம் மட்டுமே உதவும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் கவனமாக இருக்க வேண்டும்.மேலும் அதிகளவு பணிச்சுமை ஏற்படும்.எனவே நம்பிக்கையோடு இருந்தால் எதையும் உங்களால் சுலபமாக செய்ய முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஏழைகளுக்கு பண உதவியை செய்வதின் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முன்னோர்களின் சாந்திக்காகவும், சடங்குகளுக்காகவும் பணத்தை செலவழிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இல்லையென்றால் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று வாழ்வில் பொறுப்புக்கள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். இது உங்களுக்கு சிறிய அளவில் பதட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குழப்பம் ஏற்படாதபடி தெளிவாக இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிக்கு இப்போது அங்கீகாரம் கிடைக்காது, என்றாலும் அர்ப்பணிப்பு தன்மையோடு நீங்கள் பணியாற்றினால் நினைத்ததை விட அதிக அளவு அங்கீகாரத்தை விரைவில் பெறுவீர்கள். மேலும்  நல்ல நேரம் காத்திருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு உற்சாகமாக செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் சேமிப்பை அதிகரிக்க பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இறை வழிபாடு மற்றும் தியானம் மூலம் சிறப்பான திட்டங்களை நீங்கள் போடலாம். செலவுகளை கட்டுப்படுத்துவதின் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சளி அல்லது இருமல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் பருவநிலைக்கு ஏற்ப உணவை உட்கொள்ளுங்கள் குளிர்ச்சியான பதார்த்தங்களை தவிர்த்து விடுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam