“ஆங்கில மருந்துக்கு சவால் விடும் கீழாநெல்லி..!” – மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாமா?

கீழ் காய் நெல்லி என்று அழைக்கப்படுகின்ற இந்த கீழாநெல்லி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. பொதுவாக வயல், வரப்புகளிலும் கிராமத்தில் இருக்கும் வீட்டுப் பகுதிகளிலும் அதிகளவு காணப்படக்கூடிய இந்த கீழாநெல்லியில் இருக்கக்கூடிய பில்லாந்தின் என்ற முக்கிய வேதிப் பொருளானது மருத்துவ குணம் நிறைந்தது.

கீழாநெல்லியில் இருக்கக்கூடிய இந்த பில்லாந்தின் என்ற வேதிப் பொருளால் தான் இதன் இலைகளில் கசப்புத்தன்மை அளவு உள்ளது. மேலும் கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்துமே மருந்து பொருளாக இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

கீழாநெல்லி வேரை 10 கிராம் அளவு எடுத்து அதை நன்கு இடித்து பால் அல்லது மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் கல்லீரலை பலப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த சாறுக்கு உள்ளது.

சொரியாசிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இதன் இலைச் சாறை மஞ்சலோடு கலந்து போட்டு வர விரைவில் சொரியாசிஸ் குணமாகும். மேலும் இந்தச் சாறினை உங்கள் சொறி, சிரங்கு, படை போன்றவற்றிற்கு போட்டாலும் தோல் நோய்கள் விரைவில் குணமாகும்.

பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் கீழாநெல்லி இலைகளை நின்று துப்புவதின் மூலம் பல் வலி தீரும்.

மஞ்சள் காமாலையால் ஏற்படும் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை போன்றவற்றை இது நீக்குவதோடு மட்டுமல்லாமல் கல்லீரலில் ஏற்படுகின்ற வீக்கத்தையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது.

உடலில் தேமலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கீழாநெல்லி சாறோடு உப்பினை சேர்த்து தேமல் இருக்கும் இடத்தில் பூசி விட வேண்டும். இதை பூசிய பிறகு சிறிதளவு பச்சை மஞ்சளை உரைத்து அந்தப் பகுதியில் தேய்த்து நீங்கள் குளிப்பதின் மூலம் உங்கள் உடலில் இருக்கும் தேமல் மிக விரைவில் நீங்கும்.

மேற்கூறிய நன்மைகளை உணர்ந்து கீழாநெல்லியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …