சமைக்கும் போது குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வருதா? – உடனே இதை செய்யுங்க..!

குக்கரில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் குக்கரில் வைக்கக்கூடிய தண்ணீர் வெளியேறுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இல்லத்தரசிகளுக்கு உள்ளது. இப்படி நீர் கசிவதின் மூலம் நாம் வைக்கின்ற பொருள் நல்ல முறையில் வேகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், சில நேரங்களில் சாதம் வைக்கும் போது கஞ்சி கோர்த்த பதத்திலும், காய்கறிகள் வைத்திருந்தால் சரியான பதத்தில் இல்லாமல் இருக்கும்.

இப்படி குக்கர் பிரச்சனை செய்வதால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்படும். எனவே இதை ஈசியாக சரி செய்யக்கூடிய முறையை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

குக்கரில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்கக்கூடிய முறைகள்

பொதுவாக குக்கர் வாங்கி பல வருடங்கள் கடந்து விட்டால், அந்த குக்கரை சரியான முறையில் நீங்கள் பராமரிப்பதோடு அதற்கு உரிய சர்வீசுகளை செய்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அப்படி செய்யவில்லை என்றால் கட்டாயம் உங்கள் குக்கர்கள் தொந்தரவு கொடுத்து பிரச்சனையை உண்டாக்கும்.

எனவே தண்ணீர் கசிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் உங்கள் குக்கரில் போடக்கூடிய கேஸ் கட்டை சரி பார்க்க வேண்டும்.இது சில நாட்கள் ஆகிய நிலையில் இருந்தாலும் நீர் வெளியேறக்கூடிய அபாயம் உள்ளது. எனவே புதிய கேஸ் கட்டை வாங்கி பயன்படுத்தலாம்.

பிற சமயங்களில் உங்கள் குக்கரில் இருக்கும் விசிலில் அழுக்கு, உணவு துகள்கள் சிக்கி இருக்கும்.அதனை  சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நீராவி வருவது சரியாக இருக்காது. எனவே குக்கரின் விசில் முழுவதையும் நீங்கள் சுத்தப்படுத்தி அடைப்புக்களை நீக்கி விடுவதின் மூலம் இந்த பிரச்சனை ஏற்படாது.

உங்கள் குக்கரின் மூடியை சுற்றி எண்ணையை லேசாக தேய்த்து விடுங்கள். இதன் மூலம் தண்ணீர் வெளிவரும் பிரச்சனை ஏற்படாது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் வேக வைக்கும் பொருட்களோடு ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து விடுவதின் மூலமும் இந்த பிரச்சனை ஏற்படாது.

நீங்கள் பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ந்த நீரை பயன்படுத்தி சமைப்பதின் மூலம் உங்கள் குக்கரில் இருந்து தண்ணீர் வெளிவருவதை தடுக்க முடியும்.

குக்கரில் வேகவைக்க தேவையான அளவு தண்ணீரை விடுங்கள். அதிக அளவு தண்ணீரை விட்டாலும் இதுபோல தண்ணீர் கசிவு ஏற்படும். எனவே மிதமான தீயில் குக்கரை வைத்து நீங்கள் சமயங்கள் அப்படி செய்வதால் நீர் வெளியே வராது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam