“ஹோட்டல் தோசையை போல் வீட்டில் மொறு மொறு தோசை..! – இப்படி பண்ணுங்க..!

ஓட்டலுக்கு என்று சென்றால் குட்டீஸ் விரும்பி வாங்கி உண்ணக்கூடிய மொறு மொறு ரோஸ்டை உங்கள் வீட்டிலேயே எளிமையாக செய்துவிடலாம். இந்த எளிமையான தோசையை உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ணுவதோடு ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த உணவு பண்டமானது நமக்கு உதவி செய்யும்.

அது மட்டுமல்லாமல் ஹோட்டலுக்கு சென்று உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை செய்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்கு அதிகரிக்கும்.

அந்த வகையில் இன்று ஹோட்டல் தோசையை எப்படி உங்கள் வீட்டில் எளிமையாக செய்து உங்கள் பிள்ளைகளை அசத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

ஹோட்டல் தோசை செய்ய தேவையான பொருட்கள்

1.புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி அரை கிலோ

2.உளுந்து 200 கிராம்

3.கடலைப்பருப்பு 25 கிராம்

4.வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்

5.தேவையான அளவு உப்பு

6.பச்சரிசி 100 கிராம்

செய்முறை

முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி,  உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் போன்றவற்றை நன்கு கழுவி குறைந்தது மூன்று முதல் ஐந்து மணி நேரம் ஊற விடவும்.

5 மணி நேரம் கழிந்த பிறகு இந்த பொருட்களை நன்கு கழிந்து எடுத்துவிட்டு நீங்கள் அதனை கிரைண்டரில் போட்டு சிறிதளவு உப்பை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இடையிடையே நீர் சேர்த்து மாவினை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று அரைத்த மாவை நீங்கள் மறுநாள் தான் பயன்படுத்த வேண்டும். எனவே குறைந்தது 10 அல்லது 12 மணி நேரம் இடைவெளி விட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து மறுநாள் மாவு புளித்தவுடன் நீங்கள் தோசை கல்லை அடுப்பில் போட்டு மிதமான சூட்டில் மாவினை எடுத்து தோசையை வார்த்து எடுக்கவும்.

இப்போது அருமையான பொன்னிற மொறு மொறு தோசை ஹோட்டல் பதத்தில் உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து விட்டீர்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி மற்றும் சாம்பார் இணைத்து உங்கள் பிள்ளைகளின் தட்டில் வைத்து கொடுத்தால் கட்டாயம் ஒரு பிடி பிடிப்பார்கள்.

உங்களது சுவையோடு இருக்கும் இந்த தோசையை நீங்களும் செய்து கொடுத்து அனைவரிடமும் பாராட்டுதல்களை பெற்று விடுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam