“கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறோம்..!” – காரணம் என்ன பார்க்கலாமா?

கோயிலுக்கு செல்கிறோம் என்றாலே கையில் தேங்காய், பழத்தோடு வெற்றிலை, பாக்கு இவற்றையெல்லாம் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

அப்படி இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய நாம் கோயிலில் எதற்காக இந்த தேங்காயை உடைக்கிறோம் என்ற உண்மை நிலையை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படி எதற்கு கோவிலில் தேங்காயை உடைக்கிறோம் என்பது தெரியாவிட்டால், இந்த பதிவை முழுமையாக படித்துப் பார்ப்பதின் மூலம் நாம் ஏன் கோயில்களில் தேங்காய் உடைக்கிறோம் என்பது பற்றிய முழு விவரமும் உங்களுக்கு தெரிந்து விடும்.

கோயிலில் தேங்காய் உடைக்க காரணம்

கோயிலில் மட்டுமல்லாமல் திருமணங்கள் சுபகாரியங்களில் எந்தத் தேங்காய் முக்கிய இடத்தை பிடித்து விடுகிறது. புது வீடு, புது வண்டி வாங்கும்போது திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்காக தேங்காயில் நாம் சூடத்தை பற்றவைத்து சுத்தி உடைப்பதின் மூலம் கண் திருஷ்டி விலகும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஓம குண்டங்கள் வளர்த்தி யாகங்கள் செய்யும்போது அதில் இந்த தேங்காயை முழுமையாக பூர்ணாகுதியாக போடுவார்கள். அப்படி போடுகின்ற பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கு சென்றடையும் என்பதை இன்று வரை உள்ள நம்பிக்கை ஆகும்.

மேலும் தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதால் அதனை சிவபெருமானின் ரூபமாகவே பார்ப்பதோடு வழிபடவும் செய்கிறோம். குடுமையோடு இருக்கக்கூடிய தேங்காய் கடவுளுக்கு சமமாக நினைக்கப்படுகிறது.

இந்த தேங்காயை இறைவன் முன் உடைப்பது நமது தலை கனத்தை அடியோடு அழிப்பதற்கு ஒப்பம் ஆகும். தேங்காய் உடைப்பது மூலம் நம் கர்வம் நீங்குவதாகவும், அது சிதறி தெரிப்பதால் உள்ளே இருக்கும் நீர் மற்றும் பருப்பு தூய மனத்தை இறைவனுக்கு நாம் சமர்ப்பிப்பதாக எண்ணப்படுகிறது.

எனவேதான் நாம் நமது மாயையில் இருந்து விடுபட்டு இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இந்த தேங்காய் உடைத்தல் வழிபாடு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்போது உங்களுக்கு ஏன் தேங்காயை உடைக்கிறோம் என்ற உண்மை புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்களும் உங்களிடம் காணப்படும் அகம்பாவம், மாயை போன்றவற்றை விளக்கி விட்டு நல்ல மனிதராக வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam