“ப்பா. எம்புட்டு அழகு..! பாத்துகிட்டே இருக்கலாம்..” – தீயாய் பரவும் நடிகை சாயிஷா-வின் அசத்தல் போட்டோஸ்..!

அழகில் அசத்தும் நடிகை சாயிஷா ( Sayyeshaa ) சிறந்த நடனக் கலைஞர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். மும்பை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.

சாயிஷா, நடித்த படங்களில், பாடல் காட்சிகளில் மிக அனாயசமாக, நளினமாக நடனமாடி இருப்பார்.நல்ல நடிப்பாற்றலும், அவர் நடித்த படங்களில் வெளிப்பட்டிருக்கிறது.வனமகன், டெடி, கடைக்குட்டி சங்கம், கஜினிகாந்த், ஜூங்கா உள்ளிட்ட படங்களில்,நடித்திருந்தார். இதில் வனமகன், டெடி, கடைக்குட்டி சி்ங்கம், கஜினிகாந்த் படங்களில், சாயிஷா நடிப்பு பேசப்பட்டது.

Image Source : instagram.com/sayyeshaa

வனமகன் படத்தில், காட்டுக்குள், காட்டுவாசி பரம்பரையைச் சேர்ந்த ஒரு கேரக்டரில் ஜெயம் ரவி அருமையாக நடித்திருப்பார். அவரை, சென்னைக்கு அழைத்து வந்து அடைக்கலம் தந்து பராமரிக்கும் ஒரு கோடீஸ்வர பெண்ணாக, பிஸினஸ் மேக்னட்டாக ஒரு ராயல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சாயிஷா.

அதேபோல், கடைக்குட்டி சி்ங்கம் படத்திலும், இவரது நடிப்பு மிக யதார்த்தமாக இருந்தது. டெடி படத்தில், படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் மட்டுமே இவர் நடித்திருந்தார். மற்ற பெரும்பாலான காட்சிகளில், இவரது கேரக்டரில் டெடி பொம்மை நடித்திருந்நது என்பது கவனிக்கத்தக்கது. டெடி படத்தை பொருத்த வரை, இவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Image Source : instagram.com/sayyeshaa

இடையில் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது, ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது, ஒரு குழந்தைக்கு தாயாகியும் இருக்கிறார்.

Image Source : instagram.com/sayyeshaa

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த சாயிஷா, சமீபத்தில் பத்து தல படத்தில், ஒரு அயிட்டம் பாடலுக்கு, செமையாக குத்தாட்டம் போட்டு இருந்தார். அவரது ஆட்டத்துக்கு, ரசிகர்கள் விசிலடித்து, கைதட்டி, உற்சாக கூச்சலிட்டு வரவேற்றனர். இந்த பாடலுக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Image Source : instagram.com/sayyeshaa

தற்போது, சாயிஷா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கியூட் செல்லம் என, அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Image Source : instagram.com/sayyeshaa

சாயிஷாவுக்கும், ஆர்யாவுக்கும் இடையில், வயது வித்யாசம் மிக அதிகம். ஆனால், ஆர்யா தனது உடல்தோற்றத்தை கட்டுக்கோப்பாக பராமரித்து வருவதால், அதிக வித்யாசம் என்பது, வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதே போல், ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும், சாயிஷா இன்னும் பழைய அழகு மாறாமல் அதேபோல் இருக்கிறார்.

Image Source : instagram.com/sayyeshaa

எனவே, சாயிஷா தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே, ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Image Source : instagram.com/sayyeshaa

பத்துதல படத்தில், சாயிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியது கூட, இதற்கான வெள்ளோட்டமாக இருக்கலாம். ரசிகர்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கான ஒரு விஷயமாகவும் இருக்கலாம். அதே வேளையில், மற்றவர்களுக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும் ஆர்யா நடிக்கும் படங்களில் அவருக்கு ஜோடியாக கூட சில படங்களில் நடிக்கலாம்.

Image Source : instagram.com/sayyeshaa

சாயிஷாவுக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் அதிக வாய்ப்புகள் காத்திருக்கிறது. ஏனெனில் அவரது முகத் தோற்றமும், உடல்வாகும் அந்தந்த மொழி ரசிகர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில், பிளஸ் பாயிண்டுகளாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதனால், மீண்டும் சினிமாவில் சாயிஷா ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக தெரிகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …