தோட்ட பராமரிப்பு : இன்று பொதுவாக எல்லோரும் வீட்டில் ஒரு குட்டி தோட்டத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் வெளியே இருக்கும் இடத்தை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மொட்டை மாடிகளில் இருக்கக்கூடிய இடங்களிலும் வீட்டுக்கு தேவையான எல்லா வகையான காய்கறிகள் செடிகளையும் வளர்த்தி பயனடைகிறார்கள்.
அப்படி வீட்டுத் தோட்டத்தை அமைத்து அதன் மூலம் பயனடைப்பவர்கள் ஒரு சில பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதின் மூலம் மேலும் எண்ணற்ற பயன்களை அடைக்கலாம். அப்படி உங்கள் வீட்டுத் தோட்டத்தை பராமரிக்க உதவக்கூடிய எளிய டிப்ஸ் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வீட்டு தோட்ட பராமரிப்பு குறிப்புகள்
👍வீட்டு தோட்டத்தில் நாம் மண் தொட்டிகளில் தான் செடிகளை வைப்போம். அப்படி மண் தொட்டியில் செடிகளை வைக்கும் போது உப்புப் படிவு ஏற்படும். இந்த உப்பு படிவை நீக்க நீங்கள் வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரி சமமான அளவில் சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். அதை தொட்டிகளில் ஸ்பிரே செய்து பிரஸ்ஸின் மூலம் நன்றாக தேய்த்து விட்டால் உங்கள் தொட்டியில் உப்பு பதிவு இல்லாமல் அழகாக மாறிவிடும்.
👍உங்கள் வீட்டு தோட்டத்தில் பூச்சி தொல்லைகளால் அவதி ஏற்பட்டால் வேப்ப எண்ணையை எடுத்து அதனோடு சம அளவு தண்ணீர் சேர்த்து செடிகளில் பூச்சி இருக்கக்கூடிய பகுதியில் ஸ்பிரே செய்து விடுங்கள். எத்தகைய பூச்சிகள் இருந்தாலும் எளிதில் செத்து விடும்.
தற்போது கோடை என்பதால் நீங்கள் காலை வெயில் வருவதற்கு முன்பும், மாலை வெயில் சென்ற பிறகும் உங்கள் செடிகளுக்கு நீர் விடுவதின் மூலம் செடிகளை கோடையில் இருந்து எளிதில் காப்பாற்றி விடலாம்.
உங்கள் செடிகளுக்கு வாரம் ஒரு முறை எப்சம் உப்பை நீரில் கரைத்து ஊற்றுவதின் மூலம் செடிகளுக்கு தேவையான மெக்னீசியம் மற்றும் சல்பேட் சத்து கிடைக்கும்.
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்களை வளர்த்து வந்தால் அந்தத் தொட்டியை சுத்தப்படுத்தும் போது அந்த நீரை அப்படியே தூர கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் அது செடிகளுக்கு உரமாக அமையும்.
உங்கள் வீட்டில் நீங்கள் வேண்டாம் என்று நறுக்கிப் போடும் காய்கறி கழிவுகள் மற்றும் சாம்பலை செடிகளுக்கு அடி உரமாக போடுவதின் மூலம் வளமாக வளர்ந்து உங்களுக்கு தேவையான காய்கறிகளை ஆரோக்கியத்தோடு கொடுக்கும்.