பிக்பாஸ் ஜூலி ( BiggBoss Julie ) என அழைக்கப்படும் இவரது முழுப்பெயர் மரியா ஜூலியானா. ஜல்லிக்கட்டு போராட்டத்தில், மெரினா கடற்கறையில், காணோம் காணோம் என தலையில் சிவப்பு ரிப்பன் கட்டி கூவி கூவி, தமிழக அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் செய்த ஜூலியை யாராலும் மறக்க முடியாது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோ தான் இவருக்கு கடந்த 2017 ல் பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியிலேயே அவர் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. அதே போல் குறும்படத்துக்கு பெயர் வாங்கி தந்த பெருமையும் ஜூலியையே சேரும், 30 வயதுகளை கடந்துள்ள இவர், புதுச்சேரியை சேர்ந்தவர். கிறிஸ்தவ மதம் சார்ந்த இவர், நர்சிங் படித்திருக்கிறார். இன்னும் திருமணம் இல்லை.
பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் செய்த அலப்பறைகளால் மேலும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்ப்பட்டார். மற்ற போட்டியாளர்களிடமும், பார்வையாளர்களிடமும் தன்னை நல்ல விதமாக காட்டிக்கொள்ள அவர் பேசிய பொய்களால், கடுமையாக அவர் விமர்சிக்கப்பட்டார். போதிய ஓட்டு எண்ணிக்கை பெறாததால், ஒரு கட்டத்தில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் தந்த பிரபலத்தால், தமிழ் சினிமா மற்றும் டிவி சேனல்களில் ஜூலிக்கு நிறைய வாய்ப்புகள் அமைந்தன. பிரபல தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கினார்.
2018 ம் ஆண்டில் விமல், ஆனந்தி நடித்த மன்னர் வகையறா படத்தில், ஜூலி அறிமுகமானார். அம்மன் தாயே, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஜூலி நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் வில்லி கேரக்டரில் ஜூலி நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து, அவருக்கு சீரியல் வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைய வாய்ப்புள்ளது.
நடிகை ஜூலியை பொருத்த வரை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் காட்டிய ஈடுபாடும், அன்றைய தமிழக அரசுக்கும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூறிய பீட்டா அமைப்புக்கும் எதிரான கோஷங்களை அவர் எழுப்பிய விதமும், அவரது ரியாக்ஷனும் சமூக வலைதளங்களில் அவரை சிறந்த போராளியாக காட்டியது. வீரத்தமிழச்சி என்ற அடைமொழியுடன் அவரது வீடியோவை பலரும் பகிர்ந்து, அவரது புகழை பரப்பினர்.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, அவரது தகிடுத்தங்களும், பொய்யும், தன்னை மிகைப்படுத்தி காட்டிக்கொள்ள அவர் செய்த முயற்சிகளும், கேமராக்கள் முன்னால் அவர் செய்த பாசாங்கான நடிப்பும் பலத்த அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதுகுறித்து, நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனே வருத்தப்படும் அளவுக்கு, ஜூலியின் செயல்பாடுகள் இருந்தன.
அவர் மட்டும் அந்த மாதிரி நடந்துகொள்ளாமல், இருந்திருந்தால் முதல் பிக்பாஸ் சீசன் வின்னர் ஆக கூட ஜூலி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. எந்த சமூக வலைதளங்களில் அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக அவர் பாராட்டப்பட்டாரோ, அதே சமூக வலைதளங்களில் ஜூலி மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஜூலி தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில், இப்போதும் கிளாமர் படங்களை பரவ விட்டு, ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். கிளாமர் படங்களில் ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு அப்டேட் செய்வதால், ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது. சமீபத்தில் வந்த ஜூலி கிளாமர் படங்களுக்கு லைக் குவிந்து வருகிறது.