நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ), தமிழ் சினிமா நடிகைகளில் மிக முக்கியமானவர். அசத்தல் அழகியாக நடிகை பூனம் பஜ்வா இருப்பதால், அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் அதிகளவில் வருகின்றனர்.
இவரது மற்றொரு பெயர் டோலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பஞ்சாபி. கடந்த 2005ல் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமான பூனம் பஜ்வா, பின்பு, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2008 ல், பரத் ஜோடியாக சேவல் படத்தில் நடித்தார். இவரது வாளிப்பான தேகமும், பளிச்சிடும் அழகும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.
இதைத்தொடர்ந்து தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, அரண்மனை 3, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில், நடித்தார்.
பூனம் பஜ்வா, நல்ல நடிப்பாற்றலுடன் அழகு பளிச்சிடும் நடிகையாக இருப்பதால், பெரும்பாலும் இவரது படங்களில், கிளாமர் தூக்கலாகவே காணப்படுகிறது. குறிப்பாக முத்தின கத்திரிக்கா, அரண்மனை 3, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில், பல காட்சிகளில் பூனம் பஜ்வாவின் சுண்டியிழுக்கும் கவர்ச்சி, ரசிகர்களை பாடாய்ப்படுத்தியது.
சில அழகான நடிகைகளை, நல்ல நடிப்பு திறமை இருந்தும், கவர்ச்சி நடிகைகளாக, சினிமாத்துறை மாற்றி விடுகிறது. கலைச்சேவை வரும் நடிகைகள் பலர், கடைசியில் கவர்ச்சி சேவை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதில், பல நடிகைகள் கவர்ச்சி நாயகிகளாகி, இறுதியில் காணாமல் போய் விடுகின்றனர். பட வாய்ப்புகளை பெறுவதற்காக, எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க வேண்டிய நிலைக்கு, சில நடிகைகள் தள்ளப்படுகின்றனர்.
அதில் ஒருவர்தான் பூனம் பஜ்வா. இவரும் பட வாய்ப்புகளுக்கா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வரவேண்டிய ஒருவர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் ஆக மாறிவிட்டார்.அப்போதும் பட வாய்ப்புகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வருகின்றன.
அந்த வகையிலும் இவருக்கு கிடைத்தது ஏமாற்றமே.எனினும், தனது முயற்சியில் சிறிதும் சோர்வடையாத விக்ரமாதித்தன் போல, தனது பட வாய்ப்புகளை பெறும் முயற்சியாகவும், ரசிகர்களை தொடர்ந்து தனது ரசிகர்களாக பின்தொடரச் செய்யவும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் செம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் பூனம் பஜ்வா.
அதனால் எப்போதும் அவரது கவர்ச்சியான, தூக்கலான புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது சமூக வலைதளப்பக்கங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன. தினம் தினம் புதுப்புது படங்களாக போட்டு, ரசிகர்களை தூங்க விடாமல் இம்சிக்கிறார்.
லேட்டஸ்ட் ஆக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் பார்த்தால், ரசிகர்களின் மனசை குளிர்விக்க, இதைவிடவும் கிளாமர் லிமிட்டை தாண்ட முடியாது என்றுதான் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அம்மணி, எல்லை தாண்டிய கவர்ச்சியில், ரசிகர்களை திக்குமுக்காட விடுகிறார். வெயில் நேரத்தில், இவரும் தன் பங்குக்கு இப்படி சூடேற்றலாமா என, ரசிகர்கள் புலம்பி தீர்க்கின்றனர்.