இப்போது கல்லீரல் சம்பந்தமான வியாதிகள் அதிகரித்து வரக்கூடிய வேளையிலே நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் இன்றி அமையாததாகும்.
அதற்காக நீங்கள் கல்லீரலில் உண்டாகும் நச்சுக்களை எளிதில் வெளியேற்றக் கூடிய அற்புதமான பானத்தைப் பற்றி இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரல் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் பானம்
கல்லீரலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்ற உதவக்கூடிய பானத்தை முதலில் தயார் செய்வதற்கு நீங்கள் நெல்லிக்காய் ஒன்று, புதினா ஒரு கைப்பிடி, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, கருவேப்பிலை ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய எந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொண்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை எடுத்து இதில் கலந்த பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் கொதிக்க வைத்த பின்னர் இளம் சூட்டில் குடிக்க வேண்டும்.
liverஇதனை வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு நீங்கள் செய்வது மூலம் உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் சுறுசுறுப்பாகும்.
இது போலவே நீங்கள் புதினா ஒரு கைப்பிடி, ஓமவள்ளி இலைகள் மூன்று, எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு இதனை இரண்டு கப் அளவு தண்ணீரை விட்டு நன்கு சுட வைத்து எந்த பொருட்களை அதில் போட்டு மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு இந்தக் கலவையை வடிகட்டி குடிப்பதன் மூலமும் கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறும்.
liverஇந்த இரண்டு பானங்களையும் நீங்கள் செய்த பின் வெறும் வயிற்றில் குடிப்பது உங்களுக்கு அதிக அளவு நன்மை தரும். மேலும் வெறும் வயிற்றில் நீங்கள் இந்த பானத்தை குடித்த பிறகு குறைந்தது 2 மணி நேரத்திற்கு எந்த பொருளையும் நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் மிகச்சிறந்த பலனை பெற முடியும்.
எனவே இரண்டு பானங்களுமே உங்கள் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு கல்லீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. எனவே நீங்களும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு இது ஆரோக்கியத்தை தரும்.