பொதுவாக அனைத்து வீடுகளிலும் காபி மற்றும் டீ குடிக்கும் நேரங்களில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதிலும் பட்டர் பிஸ்கட் என்றால் சொல்லவே வேண்டாம் ஒன்றுக்கு, இரண்டாக .. இல்லை, இல்லை இன்னும் கூடுதலாக சாப்பிடுவார்கள்.
butter biscuitஅப்படி அனைவரும் விரும்பக்கூடிய பட்டர் பிஸ்கட்டை உங்கள் வீட்டிலேயே ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய டாப் பிஸ்கட்டாக மிக எளிதில் செய்ய முடியும். அப்படி அந்த பட்டர் பிஸ்கட்டை எப்படி செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பட்டர் பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்
1.கோதுமை மாவு ஒரு கப்
2.நாட்டுச்சர்க்கரை கால் கப்
3.வெண்ணெய் அரை கப்
4.உப்பு ஒரு சிட்டிகை
butter biscuitசெய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வெண்ணெயை போடுங்கள். வெண்ணெய்க்கி பதிலாக நீங்கள் நெய் அல்லது எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.
பிறகு இந்த வெண்ணெய்யோடு, நாட்டுச்சக்கரை மற்றும் உப்பை சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கி விடுங்கள். இது நன்கு கலந்த பிறகு எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை லேசாக போட்டு கட்டி சேராமல் நன்கு கிளறி விடுங்கள்.
butter biscuitஇப்போது நீங்கள் கிளறி இருக்கும் மாவை எல்லாம் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். தேவை எனில் பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கான அவசியம் இருக்காது.
பிறகு எந்த மாவை நன்கு தேய்த்து லேசாக சப்பாத்தி மாவை பரப்பியது போல பரத்தி விட்டு சின்ன மூடி அல்லது கிண்ணத்தை எடுத்து சிறு சிறு வட்ட வடிவமாக வெட்டி விடுங்கள்.பின் வெட்டிய அந்த பொருளின் மீது சிறிதளவு நெய்யை தடவி தட்டில் அடிக்கவும்.
butter biscuitஇதனை அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதன் மீது ஒரு ஸ்டாண்ட் போல் வைத்து தட்டில் அடுக்கி வைத்திருக்கும் அந்த பட்டர் பிஸ்கட் கட்டுகளை எல்லாம் தட்டோடு அப்படியே கடாயில் வைத்து மூடி விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்த பிறகு நீங்கள் திறந்து பாருங்கள். நீங்கள் சுவைக்க பட்டர் பிஸ்கட் தயாராக இருக்கும். அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்வதின் மூலம் பிஸ்கட் கருகாமல் இருக்கும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து சுவை எப்படி உள்ளது என்று எங்களிடம் கூறுங்கள்.