முருங்கைப் பூ வடை: மசால் வடை, உளுந்து வடை, ஆமை வடை, பருப்பு வடை என மாறி மாறி இந்த வடைகளை தின்று போர் அடித்து இருப்பவர்கள் ஒரு மாற்றத்தோடு இந்த முருங்கைப் பூ வடையை செய்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
murunkai poo vadaiஅந்த வகையில் எந்த பதிவில் இன்று முருங்கைப் பூ வடையை எப்படி வித்தியாசமான முறையில் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். முருங்கை என்றாலே ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். முழங்கை பூவை பற்றி சொல்லவே வேண்டாம் எண்ணற்ற நன்மைகளை தரும் முழங்கைப் பூ வடையை நீங்கள் இப்படி செய்து சாப்பிடலாம்.
முருங்கைப் பூ வடை செய்ய தேவையான பொருட்கள்
1.முருங்கைப் பூ ஒரு கப்
2.துவரம் பருப்பு அரை கப்
3.கடலைப்பருப்பு அரை கப்
4.காய்ந்த மிளகாய் 4
5.மஞ்சள் சிறிதளவு
6.உளுந்து கைப்பிடி அளவு
7.சோம்பு ஒரு டீஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.எண்ணெய் பொறித்தெடுக்க கூடிய அளவு
murunkai poo vadaiசெய்முறை
முதலில் நீங்கள் முருங்கை பூவை உப்பு மற்றும் மஞ்சத்தூள் போட்டு நல்ல முறையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் முருங்கை பூவின் உள் புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் அதனை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம்.
பிறகு நீங்கள் நீரில் போட்டு கழுவியப் பிறகு நீரை வடித்து விட்டு அதை எடுத்து பொடி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
murunkai poo vadaiஇதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு, உளுந்து பருப்பு இவை மூன்றையும் சேர்த்து ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது ஊறிய பிறகு தண்ணீர் சேர்த்து களிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வடிகட்டி வைத்திருக்கும் எந்த மூன்று பருப்போடு நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து உப்பு மற்றும் சோம்பினை போட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு எந்த மாவு கலவையுடன் நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் முருங்கை பூவையும் போட்டு ஒன்றாக கலந்து விடுங்கள். இதனை அடுத்து கடாயில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வையுங்கள்.
murunkai poo vadaiஎண்ணெய் நன்கு காய்ந்த பிறகு சிறு, சிறு வட்டங்களாக தட்டி எண்ணெயில் போட்டு வடையை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்
இப்போது ஹெல்தியான முருங்கைப்பூ வடை தயார் இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதின் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும்.